2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

காதலனின் தாக்குதலால் 2 வயது குழந்தை பலி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 24 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாயின்  காதலனின் கொடூர தாக்குதலால் 96 இடங்களில் கடும் காயங்களுக்கு இழக்கான 2 வயது பச்சிளம் குழந்தையொன்று பரிதாகரமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

ரியோ ஸ்மெட்லி என்றழைக்கப்படும் குழந்தையே வன்முறை மிக்க தாக்குதலால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இக்குழந்தையின் உடலில் 96 இடங்களில் காயங்கள் காணப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ரியோவின் தலை மற்றும் முகத்தில் 40 சிராய்ப்புகளும் அடிவயிற்றில் 11 சிராய்ப்புகளும் அவரது பிருஷ்டப் பகுதியில் 9.5cm x 3.7cm அளவுடைய காயமும் அவரது கைகளில் 7 சிராய்ப்பு மற்றும் உராய்வுகளும் கால் மற்றும் பாதங்களில் 20 காயங்களும் காணப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இக்குழந்தையின் தாயான கிரிஸ்டி ஸ்மெட்டில் (வயது 24) மற்றும் அப்பெண்ணின் காதலனான டேனியல் ரிக்பி (23 வயது) ஆகிய இருவருமே இக்குழந்தையின் இறப்பிற்கு காரணமென பிரிட்டனில் உள்ள கிரவ்ன் நீதிமன்றில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்குழந்தையின் மீது வன்முறையை பிரயோகித்துவிட்டு குழந்தை கீழே வீழ்ந்துவிட்டதாக டேனியல் தெரிவித்துள்ளார்.

குழந்தை கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டை கிரிஸ்ட்டி மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிஸ்டி கர்ப்பமுற்றிருந்த போது மிகவும் வன்முறையாக நடந்துகொண்டதாக ரிக்பி மீது ஏற்கனவே பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிரிஸ்டி தனது குழந்தையை ரிக்பியிடமிருந்து பாதுகாக்க தவறியுள்ளதாக வழக்குரைஞர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ரியோ உயிரிழந்தப் பின் கிரிஸ்டி அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு தனது குழந்தை கீழே வீழ்ந்துவிட்டதால் தலை நிலத்தில் அடிப்பட்டுவிட்டதென்றும் குழந்தை அசைவற்றுக்கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .