Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 03 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதையில் காரை செலுத்தி 17 கார்களை சேதப்படுத்திய நபரொருவரை நிர்வாணகோலத்துடன் பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் விழிப்புடன் செயற்பட்டு நகர பொலிஸார் மேற்படி நபரை கைது செய்துள்ளனர்.
விடாலி குரோடி என்ற இந்நபர் வீதி ஒழுங்குகளை மீறி, ஒழுங்கற்ற முறையில் வாகனத்தை செலுத்தியுள்ளதுடன் 17 வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் செலுத்திச் சென்ற கார் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தின் மீது மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பியது.
இறுதியில், பொலிஸார் அவரை பிடிக்கும்போது அவர் நிர்வாண கோலத்துடன் காரினுள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தான் மகிழ்வின்றி இருப்பதாகவும் தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் வாகனத்தை செலுத்த தீர்மானித்தாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் நிர்வாண கோலத்துடன் வாகனம் செலுத்திய காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டு ரஷ்ய தொலைக்காட்சியொன்றிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
'நான் காதல் சிறகுகளுடன் பயணித்தேன். எமது காதல் வாழ்வின் ஒருவருட பூர்த்தி நாளன்று, தீவிரமான வகையில் இந்த உறவை தொடர்வதற்கு தான் தயாரக இல்லையென்று அவள் தெரிவித்துவிட்டாள்' என்று விடாலி குறோடி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
Ramesh Friday, 04 November 2011 02:18 AM
போதை நாசம்தான்
Reply : 0 0
Irfan Tuesday, 08 November 2011 02:42 AM
bothaikku adimayaanavanuku maanam mukkiyamillai. kaathalum oru bothaithaan.
Reply : 0 0
chelvin Friday, 11 November 2011 12:00 PM
எல்லா மானக்கேடான செயல்களுக்கு இந்த மதியை கெடுத்தும் மது தான் முக்கிய பங்களிப்பு செய்கிறது. ஆனாலும் உலகம் மதுவில்தான் ஆட்டம் போடுகிறது. மரியாதையை கெடுக்கும் மது. உதாரணம் சர்வேதேச நாணய நிதியின் முன்னாள் தலைவரின் நிகழ்வு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago