2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'காத்திருப்பேன்.. ' 17 வயது மாணவனைக் கடத்திக் கைதான 37 வயது ஆசிரியை பிடிவாதம்!

Super User   / 2012 மார்ச் 19 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

"என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது. அதேபோல அவனாலும் என்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது. அவனுக்கு 21 வயது வரும் வரை காத்திருப்பேன். அதற்குப் பிறகு சேர்ந்து வாழ்வேன். அதுவரை அவனை எனது மகன் போல பார்த்துக் கொள்வேன்" என முறை தவறிய உறவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆசிரியை குமுது கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னையை அதிர வைத்த சம்பவம் 17 வயது மாணவனுடன், 37 வயது ஆசிரியை வீட்டை விட்டு ஓடிப் போன விவகாரம். அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை குமுதுவையும் மாணவனையும் கடும் சிரமத்திற்குப் பின்னர் போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

இருவரும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். பின்னர் குமுதுவை பொலிஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை சிறார் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர்.

மைனர் பையனை கூட்டிச் சென்றதால் ஆசிரியை குமுது மீது கடத்தல் வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர். மாணவனுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மாணவனைப் பிரிந்து பெரும் வேதனையில் இருக்கிறாராம் ஆசிரியை குமுது. இதுகுறித்து அவர் சிறை அதிகாரிகளிடம் கூறுகையில்இ நாங்கள் பழகுவதில் இத்தனை சட்ட சிக்கல் இருக்கும் என தெரியவில்லை. இருந்தாலும் மாணவனுக்கு 21 வயது ஆகும் வரை நான் காத்திருப்பேன்.

வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன். மாணவனை என் மகன் போல் பார்த்து கொள்வேன். என்னை மாணவன் நெடுநாள் பிரிந்து இருக்க மாட்டான் என்கிறாராம் ஆசிரியை குமுது.

குமுது வட மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள பள்ளியில் இந்தி ஆசிரியையாக இருந்து வந்தார். அவர் வேலை பார்த்த பள்ளியில் பிளஸ் ஒன் படித்தவன்தான் அந்த 17 வயது மாணவன்.

மாணவனுடன் தனக்கு ஏற்பட்ட முறை தவறிய உறவு குறித்து முன்னதாக ஆசிரியை குமுது அளித்த வாக்குமூலத்தில்...

"நான் வேலை பார்த்த பள்ளியில் 7 மற்றும் 8-வது வகுப்புகளுக்கு இந்தி பாடம் சொல்லிக்கொடுப்பேன். எனக்கு பெற்றொர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். எனக்கும் எனது கணவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டுக்கொள்வோம்.

கடந்த செப்டம்பர் மாதம் எனது கணவர் சிறிய மனத்தாங்கலில் என்னைவிட்டு பிரிந்து அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். நான் தனிமையில் மிகவும் அவதிப்பட்டேன். அப்போதுதான் மாணவனுடன் அறிமுகம் ஏற்பட்டது. செப்டம்பர் மாதம் பள்ளியில் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தில் மாணவனும் நடித்தான். நான்தான் நாடக ஒத்திகை சொல்லிக் கொடுத்தேன்.


அப்போது நாங்கள் இருவரும் ஏதேச்சையாக கட்டிப்பிடித்து விட்டோம். அந்த முதல் ஸ்பரிசம் என்னை மின்சாரம் தாக்கியதுபோல் தாக்கிவிட்டது. அதில் இருந்து நாங்கள் இருவரும் காதல் வயப்பட்டோம். இருந்தாலும் அவன்தான் முதலில் காதலை சொன்னான். எனது அழகை அவர் வர்ணிப்பான். அவன் வகுப்பில் முதல் மாணவர். நான் அதை பாராட்டுவதுபோல அவனை புகழ்ந்து பேசுவேன். இப்படியாக காதல் வளர்ந்தது.

16 வயது மாணவியாக உணர்வேன்

எனது கணவர் வீட்டில் இல்லாதது எங்களுக்குள் காதல் மேலும் வளர ஒரு தூண்டுதலாக இருந்தது. நான் அவனை சந்திக்கும்போதெல்லாம் என்னை ஒரு 16 வயது மாணவியைப்போல மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். அவன் பிளஸ்-1 வகுப்பு என்பதால் எங்களால் அடிக்கடி பார்த்துக்கொள்ள முடியாது. பள்ளி முடிந்து வீடு செல்லும்போது இருவரும் பார்த்து பேசிக்கொள்வோம். செப்டம்பர் மாத கடைசியில் ஒரு நாள் அவனை எனது வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அந்த சந்திப்புதான் எங்களை காதலோடு நிறுத்தாமல் உடல் ரீதியாகவும் இணைய வைத்தது.

அதன்பிறகு இருவரும் அடிக்கடி எனது வீட்டில் சந்தித்து உல்லாசத்தை பகிர்ந்து கொண்டோம். செல்போனில் இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்போம். எங்கள் காதல் விவகாரம் அவனது தந்தைக்கு தெரிந்துவிட்டது. அவர் என் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டார். பின்னர் சமாதானமாக பேசி முடித்து விட்டனர். அதன்பிறகு அவனை பள்ளிக்குவர அவனது தந்தை தடை போட்டு விட்டார். அவனை செல்போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் மிகவும் தவித்த நிலையில் இருந்தேன்.

இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் 26, 27, 28 ஆகிய 3 நாட்களும் பள்ளி பிராக்டிக்கல் வகுப்பில் கலந்துகொள்ள வந்தான். அப்போது நாங்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டோம். மீண்டும் நாங்கள் காதல் வானில் சிறகடித்து பறந்தோம்.

எல்லாவற்றையும் மறந்தோம்...

இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நாம் மீண்டும் சேர முடியாதுஇ இதில் நாம் சேர்ந்து வாழ நல்ல முடிவு எடுத்தாக வேண்டும் என்று அவன் கூறினான. நாங்கள் அப்போது வயது வித்தியாசத்தை பார்க்கவில்லை. போலீஸ் மற்றும் சட்டம் பற்றி சிந்திக்கவில்லை. மாணவர்-ஆசிரியை என்ற மதிப்புமிக்க உறவு பற்றியும் நாங்கள் மறந்துவிட்டோம். சென்னையை விட்டு, வெளியேறி உல்லாச வாழ்க்கையில் மிதக்க முடிவு செய்தோம்.

நான் ரூ.60 ஆயிரம் செலவுக்கு பணம் எடுத்துக்கொண்டேன். இருவரும் கடந்த 4-ந் தேதி அன்று புதுச்சேரிக்கு பஸ்சில் சென்றோம். நாங்கள் செய்த காரியம் எவ்வளவு பெரிய தவறான காரியம் என்பது பற்றி நினைக்கவில்லை. அதன்பிறகு கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்கும் சென்றோம். அங்கு லாட்ஜுகளில் தங்கி சந்தோஷமாக இருந்தோம். அதன்பின் நாக்பூர், டெல்லி வழியாக ஜம்மு சென்றோம். ஜம்முவில் வைஷ்ணவி கோவிலில் தங்கி இருந்தோம்.

இதற்குள் செலவுக்கு நான் எடுத்துச்சென்ற பணம் தீர்ந்து போனது. சென்னையில் உள்ள எனது தங்கைக்கு போன் செய்து உதவி கேட்டேன். அவள் டெல்லியில் அவளது தோழி வீட்டுக்கு செல்லுமாறு கூறினாள். அதன்படி டெல்லி சென்றோம். அங்கு எனது தங்கையின் தோழி எங்களை ஏமாற்றி விமானத்தில் சென்னை அழைத்து வந்து விட்டார். இங்கு போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.

எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை. எங்கள் காதலை வாழவிடுங்கள். இனி எனது கணவருடன் சேரமாட்டேன். வாழ்ந்தால் அவனோடு வாழ்வேன். அவன் கிடைக்காவிட்டால் நான் செத்து மடிவேன். அவனுக்கு 21 வயது முடியும்வரை நான் காத்திருப்பேன்" என்றார் குமுது.

இதேபோலத்தான் அந்த மாணவனும் கூறி வருவதாக தெரிகிறது. மாணவனுக்கு தற்போது கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனராம். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நிஜத்தை உணர ஆரம்பித்துள்ளானாம் அந்த மாணவன்.

முன்னதாக நேற்று கோர்ட்டில் ஆசிரியை குமுதுவை ஆஜர்படுத்தினர் போலீஸார். அப்போது அவர் கதறி அழுதபடி இருந்தார். மயங்கியும் விழுந்தார். அவருக்கு சூடான டீ வாங்கிக் கொடுத்து போலீஸார் அமைதிப்படுத்தினர். அப்படியும் கூட அவர் அழுதபடிதான் இருந்தார். (மூலம்: தட்ஸ் தமிழ்)


You May Also Like

  Comments - 0

  • Hassan Tuesday, 20 March 2012 04:04 PM

    மை டியர் ரிஸ்வான்,

    நீங்க; சொல்லும் மனித உரிமையெல்லாம் போலியான வெஸ்டேர்ன் பிலோசொபி, இந்த பையன் உங்களின் தம்பியாக அல்லது மகனாக இருந்தால் நீங்கள் இந்த கேடு கெட்ட பெண்ணுடன் சேர்த்து வைப்பீர்களா, மனித உரிமை காதல் என்று சொல்லி ஏன் சிறுவர் துஸ்பிரயோகம் என்ற சிறுவர் உறிமையை சிரறுமைப்படுத்திறீர்கள்

    Reply : 0       0

    David Saturday, 24 March 2012 08:06 AM

    லேட் தி லவ் லைவ் லாங், I பீல் sorry for போத,,, மே கோட் ப்ளேசஸ் them

    Reply : 0       0

    Don Saturday, 24 March 2012 04:36 AM

    ஹ்ம்ம்,இது காதல் மாதிரி இல்லையே !
    கவுன்சலிங் முடிவில் பய்யன் தெளிவாவான்!

    Reply : 0       0

    Aslam Thursday, 22 March 2012 06:28 PM

    உலகம் போகிற போக்குக்கு இதுவும் நல்லா இருக்கும். கல்வியை ஊட்ட சொன்னா காமத்தையே மாணவர்களுக்கு ஊட்டுகிறார். நல்வழி காட்ட வேண்டியவர்களே இப்படி செய்தால் மாணவ சமுதாயமும் நாளைய தலைமுறையும் எப்படி அமையும் என்று யோசித்துப் பாருங்கள். இதை வளரவிட்டால் நாளை எமது பிள்ளைகளின் நிலை என்னவாகும்?.....

    Reply : 0       0

    asfarakram Thursday, 22 March 2012 02:26 AM

    காதல் பிசாசுகள் என்ன கொடும சரவணா....

    Reply : 0       0

    Rani Thursday, 22 March 2012 12:19 AM

    [quote]மை டியர் ரிஸ்வான்,

    நீங்க; சொல்லும் மனித உரிமையெல்லாம் போலியான வெஸ்டேர்ன் பிலோசொபி, இந்த பையன் உங்களின் தம்பியாக அல்லது மகனாக இருந்தால் நீங்கள் இந்த பெண்ணுடன் சேர்த்து வைப்பீர்களா, மனித உரிமை காதல் என்று சொல்லி ஏன் சிறுவர் துஸ்பிரயோகம் என்ற சிறுவர் உரிமையை சிரறுமைப்படுத்திறீர்கள்[/quote]
    என்றாலும் திருமணம் முடிப்பதற்கு வயது என்பது முக்கியமில்லை. இரு மனங்களும் ஒன்றுபட்டால் அதை செய்து வைப்பதுதான் கடமை. ஆனால் இங்கு ஒரு விடயத்தைக் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் ஊரை விட்டு ஓடாமல் முதலில் திருமணம் செய்திருக்க வேண்டும்

    Reply : 0       0

    victor Wednesday, 21 March 2012 10:25 PM

    அவரவர் தனிப்பட்ட விஷயம். ஏன் நாற்பத்திரெண்டு வயது ஆசிரியர் பதினேழு வயது மாணவியுடன் ஓடவில்லையா?

    Reply : 0       0

    maheswaran Thilipan Wednesday, 21 March 2012 08:04 PM

    காதல் கண்களில் தொடங்கி இதயத்தில் முடியும் ஆர்னால் இது xxx தொடங்கி கட்டிலில் முடிஞ்சிருகுது. தயவு செய்து யாரும் டீசெருக்கு சாதகமா பேசாதீர்கள்.

    Reply : 0       0

    hassan Tuesday, 20 March 2012 06:10 PM

    சிறுவர் துஸ்பிரயோகம் - இதுவும் சிறுவர் உரிமையை மீறும் செயல், கடு ஊழிய சிறைத்தண்டனை கொடுக்க வேண்டும், அப்போதுதான் மற்றவர்களுக்கும் அது பாடமாக இர்ருக்கும், பயப்படுவார்கள்...

    Reply : 0       0

    maran Tuesday, 20 March 2012 05:10 PM

    காம பிசாசு

    Reply : 0       0

    Hassan Monday, 19 March 2012 07:02 PM

    நல்ல டீச்சரும் நல்ல மாணவனும்' உலஹம் கேடு ஹட்டு போய்விட்டது பாருங்கோ. டீச்சர் நல்லா மாவனுடன் அனுபவிச்சி இருக்குறா, நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்.

    Reply : 0       0

    ikmsm Tuesday, 20 March 2012 03:48 PM

    "உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்." ஆல்-குர்ஆன் 04:15.

    Reply : 0       0

    SAMAN Tuesday, 20 March 2012 09:06 AM

    60இலும் ஆசைவரலாம். அது யாருடன் என்பதுதான் கேள்வி...

    Reply : 0       0

    Abraham Tuesday, 20 March 2012 04:53 AM

    இது காதல் அல்ல ! காமம் !
    காமத்தால் ஏற்றப்பட்ட வெரி !

    Reply : 0       0

    sirajmohamed Tuesday, 20 March 2012 12:42 AM

    உங்கள் காதல் மலர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். காதலுக்கு வயசு தேவையில்லை. மனது இருந்தால் போதும். இந்த உலகம் காதலை அங்கீகரிக்கும் நாள் உங்களுக்கு வெகு விரைவில் கூடி வரட்டும்.

    Reply : 0       0

    ஸ்ரீலங்கன் ஜெமீல் ஓட்டமாவடி Monday, 19 March 2012 11:48 PM

    திருமணம், காதல் என்பவற்றிற்கு வயது வித்தியாசம் பார்க்கக்கூடாது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான். எனினும், இந்த ஆசிரியையின் வழிமுறை தவறானது. அதுமட்டுமல்ல மாணவா்களுக்கும் தவறான ,பிழையான முன்னுதாரணமாகப் போய்விடும்.

    Reply : 0       0

    ram Monday, 19 March 2012 08:50 PM

    50 இலும் ஆசை வரும்... இதில் அந்தரங்கம் கிடயாதம்மா..
    எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா ..?

    Reply : 0       0

    mohaemd jaleel Monday, 19 March 2012 07:54 PM

    இது தான் காதல் கொலை வெறி என்பது.

    Reply : 0       0

    riswan Monday, 19 March 2012 07:40 PM

    காதலுக்கு பெயர் போன தமிழ் நாட்டில் காதலை பிரிக்க கூடாது. காதலுக்கு வயது என்ன ? அவர்களுக்கு வாழும் உரிமை இங்கு மறுக்கப்படுகிறது !!! . இந்த விடயத்தில் ஏன் மாண்பு மிகு மனித உரிமை அமைப்புகள் அமைதி காக்கின்றன? காதலை சேர்த்து வைப்பதில் புகழ் பெற்ற ஜே என்ன செய்கிறார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .