2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மூடப்படுவதற்கு எதிராக போராடும் பங்களாதேஷின் 150 வருடகால விபசார விடுதிகள்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் சுமார் 150 வருடங்களாக செயற்பட்டுவரும் விபசாரவிடுதிகள், தாம் மூடப்படுவதை தடுப்பதற்கு போராடி வருகின்றன.

மதாரிபூர் மாவட்டத்திலுள்ள இச்சிவப்பு விளக்குப் பகுதியானது குறைந்தபட்சம் 150 வருடங்களாக இயங்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்குள்ள விபசாரவிடுதிகளை மூட வேண்டும் என வலியுறுத்தும் ஆர்ப்பாட்டங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் தேசிய சீர்த்திருத்த கவுன்ஸில் எனும் அமைப்பைச் சேர்ந்த சுமார் 10,000 இற்கும் மேற்பட்டோர்  ஒன்று கூடி, இந்நகரத்திலுள்ள விபசார குடியிருப்பபை மூடிவிடவேண்டுமென கோரினர். அங்குள்ள சுமார் 500 பாலியல் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

எனினும், தமது பெறுமதியான காணிகளை கைப்பற்ற முயற்சிக்கும் கட்டிட நிர்மாண தொழில்துறையினரே இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியிலுள்ளதாக பாலியல் தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

தாரா தாஸ் எனும் பெண் கருத்துத் தெரிவிக்கையில், தனது குடும்பத்தில் தான் பதினைந்தாவது தலைமுறையாக இதே விபசார விடுதியில் இந்த தொழிலை தொடர்ந்து வருவதாக கூறியுள்ளார்.

'அந்த பிரமாண்டமான பேரணி நடைபெற்றதிலிருந்து என்னால் சரியாக உறங்க முடியவில்லை. நான் எங்கே செல்லமுடியுமென்று கூறுங்கள். இதுவே எனது வீடு. எனது குழந்தை பராயத்திலிருந்து எனக்குத் தெரிந்த ஒரே தொழில் இதுவே. தயவு செய்து இந்த சமய தலைவர்களிடமிருந்து எங்களை பாதுகாக்க வேண்டும்' என அப்பெண் கூறியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டமானது உள்ளூர் அரிசியல்வாதியுடன் தொடர்புடைய வர்த்தகர்களினால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாமென பாலியல் தொழிலாளர்கள் கருதுகின்றனர். இதேவேளை, இப்பகுதியில் அண்மையில் வெடிகுண்டுகள் காணப்பட்டமை உட்பட அச்சுறுத்தல்கள் பல இடம்பெற்றதாக பாலியல் தொழிலாளர்களால் முறையிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மதாரிபூரில் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் இவ்விபசார பகுதி அமைக்கப்பட்டது.

'நாங்கள் இவ்விடத்திலிருந்து அகலப்போவதில்லையென எங்களது அமைப்பிடம் தெரிவித்துவிட்டோம். நாங்கள் சட்டபூர்வமான தொழிலையே செய்து வருகின்றோம். எங்களிடம் பால்ய வயது பாலியல் தொழிலாளர்கள் எவரும் இல்லை' என மதாரிபூரில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவி மொமோ ரானி கார்மகர் தெரிவித்துள்ளார்.

'நாங்கள் எமது மூதாட்டிகள் வாழ்ந்த பாரம்பரிய இடத்தில் வசிக்கின்றோம். அவர்களில் சிலர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். இந்த தொழிலின் மூலம் வரும் வருமானத்தினூடாக 110 சிறுவர்கள் கல்வி நடவடிக்கையை தொடர்கின்றனர்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (படம்-எஎப்பி)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .