2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு 'தாயாக' விளங்கும் பெண்

Super User   / 2010 டிசெம்பர் 23 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் இரண்டு கால்களையும் இழந்த நிலையில் 130 அநாதைக் குழந்தைகளை பராமரித்து வருகின்றார். அவர் கால்கள் இல்லாத நிலையில் இரண்டு ஸ்டூல்களின் மூலம் நடப்பதற்கு பழகிக்கொண்டு, அக்குழந்தைகளை வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸு யெஹுஹா என்ற 55 வயதான இப்பெண், 12 வயதில் ரயில் விபத்தில் தனது கால்களை இழந்தார்.

அவர் இளம் பராயத்திலேயே தனது பெற்றோரையும் இழந்த நிலையில் தனது 17 வயதில் ஹுனான் மாகாணத்திலுள்ள அநாதை இல்லத்தில் சேர்ந்தார்.

அங்குதான் அவர் கால்களுக்கு பதிலாக ஸ்டூலினூடாக நடப்பதற்கு பழகிக்கொண்டதுடன் வேலை செய்யவும் கற்றுக்கொண்டார். அத்துடன் அவர் அங்கிருந்த பிள்ளைகளை பராமரிக்க தொடங்கினார்.

யெஹுஹா, அந்தக் குழந்தைகளை குளிப்பாட்டுதல், பாலூட்டுதல், அந்தக் குழந்தைகளின் ஆடைகளை மாற்றுதல், சுத்தம் செய்தல், அந்தக் குழந்தைகளுக்கான பாதணிகளை தயாரித்தல் என பல்வேறு வேலைகளிலும் அக்குழந்தைக்கு உதவினார்.

கடந்த 37 வருடங்களுக்கு மேலாக 40 இற்கும்  மேற்பட்ட ஸ்டூல்களை 'அணிந்து' விட்டார் யெஹுஹா. 130 இற்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளை அவர் வளர்த்துள்ளார். அந்தக் குழந்தைகள் அனைவரும் அவரை 'பெரிய அம்மா' என்று அழைக்கின்றனர்.

இந்த விடுதியின் முதல் குழந்தை ஷேங் லீ. அவர் குழந்தையாக இருக்கும்போது குப்பை தொட்டிக்குள் போடப்பட்டிருந்தார். ஷேங் லீயின் வாழ்வை யெஹுஹாவே  பாதுகாத்தவர்.

'பெரிய அம்மா மட்டும் இல்லையென்றால் நான் இறந்து நீண்ட காலமாகியிருக்கும். அந்த காலத்தில், அவரது ஸ்டூல் நடைச்  சத்தம்தான்  மிகவும் அழகிய சத்தமாக எனக்கு  இருந்தது' என ஷேங் லீ தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு அவர் லாய் ஸியுவான் எனும் விவசாயியை யெஹுஹா திருமணம் செய்துக்கொண்டார். 3 வருடங்களின் பின் அவர்களது மகனான லாய் மிங்சி பிறந்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து மேற்படி அநாதைப் பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்.

'நான் உண்மையில் பெரிய மனிதர் அல்ல. ஆனால் நான் எதை செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். கவலைக்குரிய இந்த பிள்ளைகளுக்கு தாயின் அன்பை வழங்குகிறேன்' என ஸு யெஹுஹா கூறுகிறார்.


You May Also Like

  Comments - 0

  • Thilak Friday, 24 December 2010 10:16 PM

    மிகவும் கருணை உள்ளம் கொண்ட பெண்

    Reply : 0       0

    ruthra Friday, 24 December 2010 10:26 PM

    ஈன்ற உறவையே தூக்கியெறியும் கலியுலகில், உன் சேவை அளப்பரியது. உலகம் போற்ற வேண்டிய புதுமைப் பெண் நீதான். வாழ்க நீ, தொடரட்டும் உன் சேவை.

    Reply : 0       0

    Fahim Sunday, 26 December 2010 12:36 AM

    வாழ்த்துக்கள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .