Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 08 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமண காலத்தில் மனைவியுடன் போதுமான அளவு பாலியல் உறவு கொள்ளவில்லை என்ற குற்றத்திற்காக நபரொருவர் தனது முன்னாள் மனைவிக்கு 10,000 யூரோக்களை (சுமார் 15 லட்சம் இலங்கை ரூபா) நஷ்ட ஈடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.
51 வயதுடைய மேற்படி நபருக்கு பிரான்ஸின் சிவில் தண்டனைக்கோவை 215 ஆவது பிரிவின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டது. திருமணமான தம்பதிகள் 'சமூக வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள சம்மதிக்க வேண்டும் என அந்த ஷரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் உறவுகளும் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதி என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபரின் 47 வயதான மனைவி தனது கணவர் போதியளவு பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்று குறைகூறி 2 வருடங்களுக்கு முன் விவாகாரத்து கோரி வழக்குத் தொடுத்திருந்தார். அப்பெண்ணின் விவாகரத்து கோரிக்கை ஏற்கப்பட்டது.
எனினும், பின்னர் மேற்படி பெண் 21 வருடகாலம் போதிய பாலியல் உறவு இல்லாதிருந்தமைக்கு 10,000 யூரோ நஷ்ட ஈடு கோரி மீண்டும் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்.
களைப்பும் ஆரோக்கிய பிரச்சினைகளும் தனது பாலியல் செயற்பாட்டை குறைத்ததாக அக்கணவர் தெரிவித்தார்.
ஆனால் மனுதாரரான அப்பெண்ணுக்கு 10,000 யூரோக்களை நஷ்ட ஈடாக வழங்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரான்ஸின் தென் பகுதியிலுள்ள நீதிமன்றமொன்றின் நீதிபதி தனது தீர்ப்பில் 'பாலியல் உறவென்பது கணவன் மனைவி இருவருக்குமான உணர்வுரீதியான ஒரு ஈர்ப்புத்ன்மையாகும். இவர்கள் விடயத்தில் அது இருக்கவில்லை. திருமண பந்தத்தில் இணையும் போது இருவரும் வாழ்வை பகிர்ந்துக்கொள்வதற்கு சம்மதிக்கின்றனர்' என தெரிவித்துள்ளார்.
KLM Friday, 09 September 2011 07:14 PM
அடப்பாவமே
Reply : 0 0
xlntgson Friday, 09 September 2011 09:44 PM
நல்ல கதை! இதையே ஆண்கள் திருப்பிப் போட்டால்?
Reply : 0 0
goodheart Tuesday, 13 September 2011 07:36 PM
Dear xintgson, என்ன நீங்கள் மறந்துவிட்டீர்களா??, பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே?????
Reply : 0 0
iqbal Tuesday, 15 November 2011 06:05 AM
olunga avan work panni eruntha ethalam thaveai ila boss.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
4 hours ago