2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தினமும் 1000 ஈக்கள் பலி

Kogilavani   / 2014 ஏப்ரல் 29 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஓய்வூதியம் பெற்ற பெண்ணொருவர் ஒரு நாளைக்கு 1000 இற்கும் மேற்பட்ட ஈக்களை அடித்து கொல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.

சீன நாட்டைச் சேர்ந்த ருவான் டான்ங் (வயது 80) எனும் ஓய்வூதியம் பெரும் பெண்ணே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர் கடந்த 14 வருடங்களாக இந்த சமூக செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஒரு நாளைக்கு 8 மணித்தியாலம் என இவர் ஈக்களை கொல்லும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்.

காட்டில் அதிகமாக வாழும் ஈக்களை மதிப்பீடு செய்வதற்காக இவர் தனது வாழ்க்கையை அர்பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது இத்தகைய சேவைக்காக சீனாவின் ஊடகங்கள் இவரை பாராட்டியுள்ளன.

'ஈக்களானது மனிதனின் எதிரி, தொந்தரவாக இருப்பவை, பல்வேறுபட்ட நோய்களை பரப்புபவை, அருவருப்பானவை இவற்றை கொல்வதென்பது மிகவும் கடினமான விடயம்' என அப் பெண் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 'நான் ஓய்வூதியம் பெற்றவராக இருந்தாலும்  இச்சமூதாயத்தின் நலனுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று தேடிக்கொண்டே இருக்கின்றேன். நான் செய்யும் எந்த சேவையாக இருந்தாலும் அது பயனுள்ளதாக அமையவேண்டும் என்பதனாலேயே கோடைக்காலங்களில் எவ்வளவு ஈக்கள் மக்களுக்கு பிரச்சினை கொடுக்கின்றது' என்று கவனித்தேன்.

இதனாலேயே தொந்தரவாக இருக்கும் ஈக்களை கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அவைகளை ஒவ்வொரு நாளும் கொன்று வருகின்றேன். இனியும் இதனை செய்து கொண்டே இருப்பேன்.

நான் இவ்வாறு ஈக்களை கொண்டு எனது அயல் வீட்டார் எதிர்கொள்ளும் நோய்களை தடுக்கின்றேன் என்று எண்ணுகையில் பெருமிதம் அடைகின்றேன்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .