2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கொலை செய்வதற்கு இணையத்தில் 'கற்ற' நபர், மனைவியை 100 தடவை குத்தி கொன்றார்

Kogilavani   / 2011 ஜூலை 27 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒருவரை எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்த விபரங்களை இணையத்தில் ஆய்வு செய்து பெற்றுக்கொண்ட நபரொருவர், தனது மனைவியை 100 தடவைகள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்ததாக லண்டன் நீதிமன்றமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 வயதான அல்பிரீடோ மெரிகோ எனும் இந்நபர், தனது மனைவியான லிண்டா (வயது 40) என்பவரை இவ்வாறு கொலை செய்துள்ளார்.

இவர் இரண்டு வயதான தனது குழந்தை அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில், தனது மனைவியை 100 தடவைகள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்பு அவர்; சடலத்தை வீதியொன்றில் வீசியுள்ளார் என ஷீபீல்ட் கிறவுன் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

கொலைக் குற்றத்திற்கான தண்டனை என்னவென்பதையும் இவர் ஆராய்ந்தாராம்.

மெரிகோவும் லிண்டாவும் 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இருவரின் திருமண வாழ்க்கையும் புயல் மிகுந்ததாகவே இருந்ததாம்.

தன்னை தனது கணவர் மெரிகோ சந்தேகிப்பதாகவும் தன்னை கட்டுப்படுத்த முயன்றதாகவும் லிண்டா குற்றம் சுமத்தினாராம்.

அதன் பின்பு லிண்டா விவாகரத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தனது வாடகை வீட்டிற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு சென்றுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • Ullam Thursday, 28 July 2011 02:39 AM

    தப்புவதற்கு வழியிருக்கும் வரை இவ்வாறான கொலைகள் தொடரும்....

    Reply : 0       0

    Anban Thursday, 28 July 2011 10:18 PM

    அவனுக்கான தண்டனையும் கொடூரமாக இருக்க வேண்டும். அன்றில் இத்தகையோருக்கு பாடம் புகட்ட முடியாது போகும்.

    Reply : 0       0

    xlntgson Friday, 29 July 2011 10:51 PM

    Spouse murder now a common occurrence!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .