Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன்னால் எவரேனும் நிர்வாணமாக தோன்றினால், அந்நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கத் தயாரென பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார்.
அல்கி டேவிட் என்பவர் பிரித்தானிய பத்திரிகையொன்று வெளியிட்ட பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 45 ஆவது இடத்தில் உள்ளார். அவரிடம் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி 1.15 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள்; எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் நிர்வாணமாக ஒபாமாவின் முன்னால் தோன்றுபவர்களுக்கு 10 லட்சம் டொலர் பரிசளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
புதிய இணையத்தளம் ஒன்றுக்கான பிரச்சாரமாக இந்த விபரீதமான பரிசுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபரான 42 வயதான அல்கி டேவிட், Battlecam எனும் இணையத்தளத்தை உருவாக்கியுள்ளார். இந்த இணையத்தளம் வேடிக்கையான செயல்களுக்காக மக்களுக்கு ஆயிரக்கணக்கான ஸ்ரேலிங் பவுண்களை பரிசாக வழங்கி; வருகிறது. இச்செயற்பாடுகள் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.
நடிகராகவும் விளங்கும் அல்கி டேவிட், ஒபாமாவின் முன் நிர்வாணமாக தோன்றுபவர்களுக்கு ஒரு லட்சம் டொலர் வழங்குவதாக முதலில் அறிவித்ததாக டெய்லி டெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
எனினும், பின்னர் இந்த துணிச்சல் மிகுந்த வேடிக்கைக்கு இப்பணம் போதுமானது அல்ல என்று அவர் கூறியுள்ளதுடன் அத்தொகையை ஒரு மில்லியன் டொலராக அதிகரித்துள்ளார்.
ஒபாமாவின் முன்னால் நிர்வாணமாகத் தோன்றி பரிசு பெற விரும்பும் நபர் தனது வயிற்றில் மேற்படி இணையத்தளத்தின் பெயரை எழுதியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மக்களை தான் கோபமூட்டுகிறார் என்ற கருத்தை அல்கி டேவிட் நிராகரித்துள்ளார்.
'இரகசியப் பாதுகாப்புச் சேவைப் பிரிவினர் என்னை அப்புறப்படுத்திக்கொண்டு வெள்ளை மாளிகையின் துவிச்சக்கரவண்டி தரிப்பிடத்தின் பின்னால் வைத்திருப்பது போல் எண்ணிப் பார்த்தேன். ஆனால் எல்லாமே வேடிக்கைதான்' என்கிறார் அவர்.
Hussain Monday, 23 August 2010 04:48 PM
நிவாரனத்திக்கும் நிர்வானத்திக்கும் வித்தியாசம் பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கு. உலகம் எங்கே செல்கிறது?
Reply : 0 0
xlntgson Monday, 23 August 2010 08:49 PM
இதை எல்லாம் தேச துரோகமாகவோ தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒரு செயலாகவோ அமெரிக்காவில் கருத மாட்டார்களா? அவ்வாறு ஒருவர் பணத்துக்கு ஆசைப்பட்டு ஜனாதிபதி முன் தோன்றிவிட்டால் ஜனாதிபதி சகித்துக்கொள்வாரா நகைச்சுவை என்று? வினோதமான ஜனநாயகம் தான், அமெரிக்க ஜனநாயகம். அவர் மீது மையல் கொள்ளாவிட்டால் சரி, மிசேல் ஒபாமா எச்சரிக்கையாக இருக்கட்டும். ஆடைகளை ஒருவர் முன் களைவது மேலை கலாசாரத்தில் காதல் அழைப்பு விடுவது போலும் கிழக்கில் அவமரியாதை செய்வது போன்றதுமாகும். கலாச்சாரங்கள் வெவ்வேறு, எதிரெதிர், புரியாத புதிர்!
Reply : 0 0
sheen Tuesday, 24 August 2010 08:16 PM
ஆடைகளை களைந்துவிட்டு ஓடுகிறவர்கள் இப்போது குறைவு. நீல இணைய தள வலையிடங்கள் வருகையின் பின் உணர்ச்சி மேலீட்டினால் நிர்வாண ஓட்டங்கள் குறைந்து விட்டன.இப்போது அதை எப்படியாவது மீளக்கொண்டுவரவேண்டும் என்று சில வேடிக்கை புத்திக்காரர்கள் விரும்புகின்றார்கள் போலும். லிபரல்/தாராளக்கொள்கையையும் (கலாசார படுகொலை?) இலவச செக்ஸ் கொள்கையையும் இத்தோடு இணைத்துக்கொள்வார்கள். ஆடை நாகரிகம் அழகாக இல்லையா? இந்த ஹிப்பிகள் ஆடைத்தொழிற்சாலைகள் தாம் சுற்றாடல் மாசுபட காரணம் என்பர். இவர்களிடம் பேசி தப்ப இயலாது, கற்காலம் கலிகாலம்.
Reply : 0 0
nifras Tuesday, 24 August 2010 09:31 PM
பாவம் ஒபாமா....!
Reply : 0 0
nifras Tuesday, 24 August 2010 09:56 PM
பாவம் ஒபாமா ......
Reply : 0 0
nifrees Wednesday, 25 August 2010 02:55 PM
இதில் என்ன நகைச்சுவை இருக்கு?
ஏன் ஒபாமா செக்ஸ்சுக்கு எதிர் கொள்கை கொண்டவரா, இல்லை, அந்த கோடீஸ்வரருடன் ஒபாமா ஏதேனும் பேரம் பேசி இருக்காரா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago