2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நீச்சல் தடாகத்தில் 2 வயது குழந்தை தூக்கியெறிந்த நபர்

Kogilavani   / 2014 மே 19 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீச்சல் தடாகத்தில் தனது இரண்டு வயது குழந்தையை தூக்கியெறிந்த நபர் மீது சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான இரண்டு குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன.   

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வசித்து வரும் குரே மைக்கார்;த்தி என்ற நபர் மீதே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன.
மேற்படி நபர் தனது இரண்டு வயது மகளுக்கு நீச்சல் கற்பித்து கொடுக்க வேண்டுமென்பதற்காக நீச்சல் தடாகமொன்றில் குழந்தையை தூக்கியெறிகின்றனர்.

இக்காட்சிகள் அடங்கிய வீடீயோவை பார்த்த பலர் அதர்ச்சியுற்றுள்ளனர். இந்நிலையே மேற்படி நபர் மீது சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன.

குறித்த குழந்தையானது 5 வாரங்களே நிறம்பிய நாய்குட்டியொன்றை தண்ணீருக்குள் எறிந்துள்ளது. இதன்போது அந்நாய்க்குட்டி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. இந்நிலையில் தண்ணீர் விளையாட்டு தொடர்பில் குழந்தைக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறு நீச்சல்தடாகத்துக்குள் எறிந்ததாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

இவ்வீடியோ காட்சிகளை பார்த்து தான் அதர்ச்சியடைந்ததாக குழந்தையின் தாய் சமந்தா தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .