2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

லொத்தரில் வென்ற 180 கோடி ரூபாவை செலவிட்டு முடித்த நபர்மீது சான்ட்விச் திருட்டு குற்றச்சாட்டு

Super User   / 2012 பெப்ரவரி 20 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2002 ஆம் ஆண்டு லொத்தர் சீட்டிழுப்பில் 9.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை (சுமார் 180 கோடி இலங்கை ரூபா) வென்ற பிரித்தானிய இளைஞர் ஒருவர் தனது பணத்தை ஊதாரித்தனமாக செலவிட்டு முடித்தநிலையில் சான்ட்விச் ஒன்றை திருடியதாக நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

மைக்கல் கரோல் எனும் இந்த இளைஞர் 2002 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் 9.7 மில்லியன் பவுண்களை லொத்தர் சீட்டிழுப்பில் வென்றார். சுத்திகரிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த அவருக்கு இப்பெருந்தொகை பணப்பரிசு கிடைத்தபோதிலும் அதை அவர் முறையாக பயன்படுத்தி தனது வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளவில்லை.

மாறாக கேளிக்கை விருந்துகள், கொகேயின் போதைப்பொருள், விபசாரிகள், நகைகள், ஆடம்பரகார்கள் என்பவற்றில் தனது பணத்தை செலவிட்டார். தனது உறவினர்களுக்கும் சிறிதளவு கொடுத்தார்.

2004 ஆம் ஆண்டு அவர் போதைப்பொருள் தடுப்பு சிகிச்கைக்கு உட்படத் தவறியமையால் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் நீதிமன்றுக்கு வருகையில் பாரிய தங்க நகைகளுடன் ஆடம்பரமாக காணப்பட்டார். 

அதன்பின்னரும் தொடர்ந்த தனது ஆடம்பரவ வாழ்க்கையில் தனது பணம் முழுவதையும் அவர் செலவிட்டு முடித்தார். தனது சுத்திரிப்பாளர் பணிக்கு மீண்டும் திரும்பிய அவர் அரசாங்கத்தின் உதவித் தொகையுடன் காலத்தை கடத்துகிறார்.
கடந்த வருடம் இரு தடவை அவர் தற்கொலைக்கும் முயற்சித்தார்.

அண்மையில் அவர்சுப்பர் மார்க்கெட் ஒன்றில் 11 ஸ்ரேலிங் பவுண்கள் (சுமார் 2000 ரூபா) பெறுமதியான சான்ட்விச் ஒன்றை எடுத்துக்கொண்டு பணம்செலுத்தாமல் சென்றமை கண்காணிப்பு கமெராவில் பதிவாகியது.  இதனால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனினும் பொலிஸார் அவருடன் தொடர்புகொள்வதற்கு முன்னர் அவர் திரும்பி வந்து பணம் கொடுத்தார்.

தான் பொருட்களை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்க மறந்துவிட்டு சென்றுவிட்டதாக அவர் நீதிமன்றில் ஒப்புககொண்டார். நீதிமன்றம் அவரை எச்சரித்து நிபந்தனையுடன்; விடுவித்தது. 9 மாதங்களுக்குள் மீண்டும் குற்றம் புரிந்தால் அதிக தண்டனை வழங்கப்படும் என அவர் எச்சரிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • piththan Tuesday, 21 February 2012 07:50 AM

    கஷ்டப்பட்டு சம்பாதித்தா அதன் பெறுமதி தெரியும்,

    Reply : 0       0

    rahumathulla Tuesday, 21 February 2012 01:47 PM

    அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிப்பான் என்பது இது தானோ .............?

    Reply : 0       0

    shameer Tuesday, 21 February 2012 07:00 PM

    நான் ஒரு garasi வேண்டும்

    Reply : 0       0

    Kumaran rajh Wednesday, 22 February 2012 04:25 PM

    aasai thirnthathu poothum --- ini sappida arasa uthavi irukkuthane!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .