2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஆணின் தலையிலிருந்த 10 செ.மீ. நீளமான 3 ஆணிகள் மீட்பு

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


நபரொருவரின் தலையிலிருந்து 10 சென்றி மீற்றர் நீளமான 3 ஆணிகள் சத்திர சிகிச்சையினூடாக அகற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் புஜுயன் மாகாணாம் ஹெபெங் என்ற ஊரிலுள்ள வைத்தியசாலையில் கடந்த 3 மாதங்களாக நபரொருவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவரது தலையில்  10 சென்றி மீற்றர் நீளமான 3 ஆணிகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இவ் ஆணிகளானது குறித்த நபரின் மண்டையின் அறையப்பட்டு மூளைக்குள் சென்ற நிலையில் காணப்பட்டுள்ளன. ஆனால், அதிஷ்டவசமாக அவை குறித்த நபருக்கு எவ்வித உயிராபத்தையும் ஏற்படுத்தாத நிலையில் சத்திரசிகிச்சைக்கூடாக அகற்றப்பட்டுள்ளன.

குறித்த நபரை யாரேனும் கொடூராமாக இவ்வாறு தாக்கியிருக்கலாமென வைத்தியசாலை நிர்வாகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என சீன பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .