2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ரயில் வாங்குவதற்கு விண்ணப்பித்த 4 வயது சிறுவன்

Super User   / 2012 ஜூன் 29 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்மையான ரயில் ஒன்றை வாங்குவதற்கு நான்கு வயதான சிறுவனொருவன் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்த சம்பவம் நியூஸிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

வெலிங்டன் பிராந்திய சபையின் போக்குவரத்து பிரிவான மெட்லிங் நிறுவனம் பழைய ரயில் ஒன்றை விற்பனை செய்வற்கு, 'ட்ரேட் மி' எனும் ஏலவிற்பனை இணையத்தளம் மூலம் அறிவித்தல் விடுத்திருந்தது.

இதற்கு முதலாவது பிரதிபலிப்பாக, 29,000 டொலர்களுக்கு அந்த ரயிலை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பமொன்று கிடைத்தது. தமது பழைய ரயிலை விற்க வாய்ப்பு கிடைக்கிறது என்று நம்பிய மெட்லிங் நிறுவன அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் ஆர்வம் மிகுந்த நான்கு வயது சிறுவன் ஒருவனே இவ்விண்ணப்பதாரி என அறிந்து அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அச்சிறுவனின் தாய் மின்னஞ்சல் மூலம் அதிகாரிகளுக்கு உண்மையை விளக்கினார்.

'எனது நான்கு வயது மகன் விளையாடிக்கொண்டிருந்தான். அவனே இந்த விண்ணப்பத்தை செய்தான். உண்மையில் நான் இந்த ரயிலை வாங்க விரும்பவில்லை. அந்த விண்ணப்பத்தை நீக்க முடியுமா?' என அவர் குறிப்பிட்டிருந்தார்.

'ட்ரேட் மி' இணையத்தளம் அப்பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் மேற்படி விண்ணப்பத்தை நீக்க சம்மதித்தது.
1940 களிலிருந்து வெலிங்டன் பிரதேசத்தில் சேவையில் ஈடுபட்ட மேற்படி ரயில் கடந்த  வாரம் சேவையிலிருந்து நீக்கப்பட்டு, ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .