2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தாயை மீட்பதற்கு உதவிகோருவதற்காக 1 மைல்தூரம் நடந்து சென்ற குழந்தை

Kogilavani   / 2013 நவம்பர் 07 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 வயது குழந்தையொன்று ஒருமைல் தூரம் தனியாக நடந்துசென்ற தனது தாயின் மரணம் குறித்து பாட்டிக்கு அறிவித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் தாயான கிரிஸ்டி லியேன் டிலேனி  (வயது 26) என்பவர் அவரது கணவரான ஜோனி லோஷ்வான் (வயது 36) என்பவரால் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் கொல்லப்பட்டதை அறியாத அந்த குழந்தை தனது தாய் நீண்ட நேரமாகியும் எழாமல் இருப்பதை அவதானித்து அதனை தனது பாட்டிக்கு கூற நினைத்துள்ளது.

இதன்போது, தனது வீட்டிலிருந்து ஒருமைல் தூரத்தில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு அக்குழந்தை தன்னந்தனியாக நடத்து சென்றுள்ளது.

மூன்று வயது மட்டுமே நிறம்பிய அந்த குழந்தை போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையை கடந்து சென்று தனது பாட்டியின் வீட்டை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயுடன் வீட்டிற்கு நடந்து வந்த ஞாபகத்தை வைத்து தன்தை தேடி குழந்தை வந்ததாக குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜோனி லோஷ்வானை கைதுசெய்ய வேண்டும் என உள்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .