2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஓவியங்கள் மூலம் பெரும் செல்வந்தனான 9 வயது சிறுவன்

Super User   / 2012 ஜூலை 17 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனைச் சேர்ந்த 9 வயதான சிறுவன் ஒருவன் தான் வரைந்த ஓவியங்கள் மூலம் செல்வந்தனாகியுள்ளான்.

இவர் தனது தான் வரைந்த ஓவியங்களை  பிரிட்டனின் நோர்போகை சேர்ந்த கெய்ரோன் வில்லியம்ஸன் என்ற இச்சிறுவனின் 24 ஓவியங்கள் அண்மையில் சுமார் 2.5 லட்சம் ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்பனையாகியுள்ளன.

இயற்கை காட்சிகளை சித்தரிக்கும் ஓவியங்களள் 15 நிமிடத்தில் தொலைபேசி மற்றும் இணையத்தளங்களுக்கூடாக விற்பனையாகியுள்ளது.

மேற்படி சிறுவன் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மேற்கொண்ட சுற்றுலாவின்போது ஓவியங்களை வரைவதற்கு ஆரம்பித்தான்.

இச்சிறுவனின் புகைப்படங்கள் பல்லாயிரக்கணக்கான பௌண்களுக்கு விற்பனையாகியதை தொடர்ந்து இச்சிறுவன் சர்வதேச ஓவியராக விளங்குகிறான்.  அவன் ஒரு சில நிமிடங்களில் வரையும் ஓவியங்கள்கூட 6,000 அல்லது 7,000 ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்பனையாகின்றன.

எனினும் இச்சிறுவன் சம்பாதித்த பணத்தை அவன் 18 வயதை அடையும் வரை சுதந்திரமாக செலவிட அனுமதிக்கப்போவதில்லை என அவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். தற்போது அப்பணத்தை அவர்கள் தமது மகனின் சார்பில் முதலீடு செய்துவருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .