Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 06 , மு.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பின்லாந்தில் நடைபெற்ற மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் போட்டியில் டெய்ஸ்டோ மெய்ட்டெனென் மற்றும் கிறிஸ்டினா ஹாபனென் ஜோடி தொடர்ந்து மூன்றாவது தடவையாக வெற்றிபெற்றுள்ளது.
சோங்காஜார்வி நகரில் கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் இந்த ஜோடி வெற்றிபெற்றது. கடந்த இரு வருடங்களில் நடைபெற்ற போட்டிகளிலும் இவர்களே சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் கணவர்கள் தத்தமது துணைவியை தூக்கிக்கொண்டு 250 மீற்றர் தூரம் ஓடிய பின்னர் தடையொன்றை கடந்து செல்ல வேண்டும். பின்னர் நீர்த் தடாகமொன்றையும் கடக்க வேண்டும்.
துணைவியை தமது தோள்களில் அல்லது முதுகில் வைத்துக்கொண்டு கணவர்கள் ஓடலாம்.
டெய்ஸ்டோவும் கிறிஸ்டினாவும் இரண்டு விநாடி வித்தியாசத்தில் முதலிடம் பெற்றனர்.
இது குறித்து டெய்ஸ்ட்டோ கருத்துத் தெரிவிக்கையில், 'முந்தைய வருடத்தைவட இவ்வருடம் நீர்த்தடாகக் கட்டம் மிகவும் கடினமாக இருந்தது.
மிக ஆழமாக இருந்தமையே இதற்குக் காரணம். காலநிலையும் மிகவும் சிறப்பானதாக இருக்கவில்லை. 30 பாகை செல்சியஸ் பாகை வெப்பநிலை உண்மையில் எனக்கு மிகக் கடினமானது' என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago