2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மூளை இன்றி பிறந்த குழந்தை 3 வருடங்களின் பின் மரணம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 03 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூளை இன்றி பிறந்த அமெரிக்காவின், கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த நிகொலஸ் கோகி என்ற மூன்று வயது சிறுவன், வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளான்.

பத்தாயிரத்தில் ஒருவர் இவ்வாறு பிறக்க முடியும் என்று அறிவியல் நிபுணர்களால் கூறப்பட்ட நிலையில் மிகவும் கவனமான முறையில் பாதுகாத்து வரப்பட்ட மேற்படி சிறுவன், வைரஸ் தொற்று காரணமாக மூச்சுத் திணறலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளான் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மூளை இன்றி பிறந்த நிகொலஸ் உயிர்வாழ மிகவும் சிரமப்பட்ட போதிலும், அவனுக்கு விசேட மருத்துவ உபகரணங்கள் எவையும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்றும் மருந்துகளின் மூலமாகவே அவன் இந்த மூன்று வருடங்களும் உயிர்வாந்தான் என்றும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான சிறுவனைக் காப்பாற்றுவதற்கான அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை என்றும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .