2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பெற்றோரின் பாலியல் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த 15 வயது சிறுமி அதிர்ச்சி

Kogilavani   / 2012 பெப்ரவரி 22 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனியில் 15 வயது சிறுமியொருத்தி தனது பெற்றோரின் பாலியல்காட்சியை தொலைக்காட்சியொன்றில் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு பாலியல் நடவடிக்கைகள் இடம்பெறும் கிளப் ஒன்றில் மேற்படி தம்பதியினர் இருந்தபோது பதிவுசெய்யப்பட்ட  காட்சி  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. இத்தகைய கிளப்களில் இடம்பெறும் நடவடிக்கைகள் தொடர்பான விவரணப்படமொன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியபோதே அதில் தமது தந்தையையும் தாயையும் பார்த்து அச்சிறுமி அதிர்ச்சியடைந்தாள்.

மேற்படி சிறுமியின் தாயும் தந்ததையும் தமது முக அடையாளங்கள் மறைக்கப்படும்  என்ற நம்பிக்கையில் படம்பிடிக்கப்படுவதற்கு  ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால், மேற்படி தொலைக்காட்சி  நிறுவனம் இத் தம்பதியினரின் முகங்களை மறைப்பதற்கு மறந்துவிட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அத்தம்பதியினர் நஷ்ட ஈடுகோரி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.
எனினும் நஷ்டஈடு கோரிக்கையில் இத்தம்பதி வெற்றி பெறுவதற்கு சிறுமியை விசாரிக்க வேண்டியிருக்கும் எனவும் அதுமுறையானது எனத் தான் கருதவில்லை எனவும் கூறி அக்கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

எனினும் அக்காட்சியில் தோன்றியதற்காக அத்தம்பதிக்கு சிறிய கொடுப்பணவொன்றையும் வழக்கு செலவுத் தொகையையும்  வழங்குமாறு  குறித்த நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • riswan Thursday, 23 February 2012 04:43 PM

    இது என்ன நீதி.... , இது நிர்வாணத்தையும் விபச்சாரத்தையும் ஊக்குவிக்கிறது.

    Reply : 0       0

    love nation Friday, 24 February 2012 08:51 PM

    பாலியல் உலகம் =வினோத உலகம்

    Reply : 0       0

    Niro Friday, 24 February 2012 11:10 PM

    நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு

    Reply : 0       0

    ikmsm Friday, 24 February 2012 11:57 PM

    " நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது." ஆல்- குர்ஆன் 17:32

    Reply : 0       0

    ikmsm Saturday, 25 February 2012 12:28 AM

    "கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.)...." ஆல்- குர்ஆன் 24:20

    Reply : 0       0

    jaleel jp Monday, 27 February 2012 12:28 AM

    அழிவு காலம் நெருங்கிவிட்டது. எல்லோரும் ஐந்து அறிவுகளாக மாறிவிட்டார்கள். யா அல்லாஹ் நீந்தான் மனித இனத்துக்கு நல்ல அறிவை கொடுக்கவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .