2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மாணவியுடன் இணைந்து தயாரித்த ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்ட 14 வயது சிறுவன்

Kogilavani   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதினான்கு வயதான பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை மாணவியொருத்தியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஆபாச காட்சிகள் அடங்கிய வீடீயோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றது.

மேற்படி சிறுவன் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த வீடீயோ காட்சிகள் அந்த இணையத்தளத்திலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பாக ஆயிரக்கணக்கானோர் அதனை பார்வையிட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் க்ளொஸெடர்ஷயரைச் சேர்ந்த மாணவனே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளான். இச்சிறுவனும் சிறுமியும் வெவ்வேறு பாடசாலைகளை சேர்ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் காரணமாக மேற்படி மாணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டுள்ளான். மேற்படி எச்சரிக்கை ஆறு ஆண்டுகளுக்கு அம்மாணவனின் பதிவில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாணவியின் பெற்றோருடன் அதிகாரிகள் பேசிய போதிலும் அம்மாணவிக்கு எதிராக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.

இதேவேளை க்ளொசெஸ்டர்ஷியர் பிராந்தியத்திலுள்ள மற்றொரு பாடசாலையின் அதிபரான லோரன்ஸ் மொன்டேகு தெரிவிக்கையில், நவீன தொழில்நுட்பத்தின் தீங்குகளில் ஒன்று இதுவென எச்சரித்துள்ளார்.

வேறு மாணவர்கள் தமது கணியில் இந்த ஆபாச படத்தை பார்த்ததாக பெற்றோர்கள் தெரிவித்தமை குறித்து  லோரன்ஸ் மொன்டேகு கூறுகையில், 'சிறியவர்கள் இத்தகைய ஆபாச படங்களை பார்க்க நேரிட்டமை கவலைக்குரியது. ஆனால் இது நவீன தொழில்நுட்பத்தின் தீங்குகளில் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள்.

சிறார்களுக்கு நாம் நவீன தொழில்நுட்பத்தின் நன்மைகள் குறித்து கற்பிக்கின்றோம், மாறாக அதை துஷ்பிரயோகம் செய்து சிக்கலில் விழுவதைப் பற்றியல்ல' எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .