Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
George / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரிதம் அன்ட் புளூஸ், பங்க் ராக், அண்ட் ரோல் போன்ற புதியவகை மேற்கத்திய இசையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் பிரின்ஸ் ரோஜர்ஸ் நெல்சன்(57) அமெரிக்க மக்களால் பொப் இசை உலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார்.
உலகம் முழுவதும் தனது இசைக்குழுவுடன் பயணம் செய்து பிரின்ஸ் என்ற ஒற்றைப் பெயரால் மிகவும் பிரபலமான இசைக்கலைஞராக வலம்வந்த இவர், அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னியேபோலிஸ் நகரில் வசித்து வந்தார்.
நேற்று தனது வீட்டில் உள்ள லிப்ட்டின் உள்ளே மர்மமான முறையில் பிரின்ஸ் இறந்துகிடந்தார்.
பிரின்ஸ் மறைவுக்கு ஒபாமா இரங்கல்
பொப் இசை உலகின் பிரபல பாடகர் பிரின்ஸ் ரோஜர்ஸ் நெல்சனின் மரணத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.
'பிரின்ஸின் திடீர் மரணத்தால் துயரப்படும் உலகின் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் வரிசையில் நானும் மிச்சேலும் இணைந்து வருந்துகிறோம்.
இசையின் உண்மையான வடிவத்தை உரிய முறையில் மக்களிடம் கொண்டுசென்று பிரபலப்படுத்திய வெகு சிலரில் பிரின்ஸ் மிகவும் குறிப்பிடத்தக்க இசைக் கலைஞராவார். இசையில் பல புதிய பரிணாமங்களை அவர் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
இசையுலகின் சிருஷ்டிகர்த்தாவாக திகழ்ந்த அவரை பிரிந்து வாழும் குடும்பத்தார், இசைக்குழுவினர் மற்றும் அவர்மீது பேரன்பு வைத்திருக்கும் அனைவருடனும் எங்களது எண்ணமும், பிரார்த்தனையும் எப்போதும் இருக்கும்' என இரங்கல் செய்தியில் பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
41 minute ago
47 minute ago