2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

உலக அழகி வனெசா போன்ஸி டீ லியோன்

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை, மெக்சிகோ இம்முறை தன்வசப்படுத்திக்கொண்டது.   

மெக்சிகோவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அந்நாட்டின் அழகியான வனெசா போன்ஸி டீ லியோன் (வயது 26), 2018ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தைச் சூடிக்கொண்டார்.   

இவ்வாண்டுக்கான உழக அழகிப் போட்டி, சீனாவில் அண்மையில் நடைபெற்றது. 117 அழகிகளுடன் போட்டியிட்டு, வனெசா போன்ஸி டீ முதலிடத்துக்குத் தெரிவானதுடன், அழகிக்கான பட்டத்தையும் சுவீகரித்துக்கொண்டார்.   
கடந்த வருடம் உலக அழகியாகத் தெரிவுசெய்யப்பட்ட இந்தியப் பெண்ணான மனுசி சில்லர், உலக அழகிக்கான கிரீடத்தை வனிசாவுக்கு சூட்டி, உலக அழகியாக அவரை அங்கிகரித்தார்.   

ஒரு பெண் உலக அழகியாகத் தெரிவாவதற்கு அவரது அழகு மட்டும் கணக்கிடப்படுவதில்லை. மாறாக அந்தப் பெண்கள் ஆற்றும் சமூகப் பணிகளும் கருத்திற்கொள்ளப்படுகின்றன.   

உலக அழகிப் போட்டியில் ஒரு போட்டியாளராகப் பங்குபற்றுபவர், நல்ல ஆளுமைமிக்கவராக, சிறந்த கல்வியாளராக, பொதுப்பணி ஆற்றுபவராக, ஒழுக்கமிக்கவராக இருப்பது அவசியம்.   
உள்நாட்டில் நடைபெறும் அனைத்து அழகிப் போட்டிகளிலும் வெற்றிபெற்று, பின்னரே, சர்வதேச போட்டியில் பங்குபற்ற வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெறுவதென்பது, அத்தகைய இலகுவான விடயமல்ல. போட்டிகளில் வெற்றிபெற, தன்னம்பிக்கையும் திடகாத்திரமும், பொறுமையும் அவசியம். இத்த​ைகயப் பண்புகளைத் தாண்டி மனிதநேயமிக்கவராக, பொதுப் பணியாற்றுபவராக இருப்பது மிகவும் முக்கியமானது.   

உலக அழகியாகப் பட்டத்தைச் சூடிக் கொள்ளும் பெண், உலகில் வாழும் அனைத்துப் பெண்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டுமென்பதே, உலக அழகிப் பட்டத்தின் தத்துவமாக அமைந்துள்ளது.   

1996ஆம் ஆண்டு உலக அழகியாக தெரிவுசெய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய்கூட ஒரு நடிகையாக அல்லாது உலக அழகியாகவே, இதுவரை பார்க்கப்படுகிறார். உலக அழகியாகத் தெரிவு செய்யப்படுபவர்கள், இத்தகைய புகழைக்கொண்டு விளங்க வேண்டுமென்பதே, அந்தப் பட்டத்தின் தார்ப்பரியமாக அமைந்துள்ளது.   

மெக்சிகோ அழகி வனெசா போன்ஸி டீயும் இதற்கு விதிவிலக்கல்ல. மெக்சிகோவில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றி பெற்றதன் பின்னரே, உலக அழகிப் போட்டிக்கு, மெக்சிகோ சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.   

வர்த்தகத்துறையில் சர்வதேசப் பட்டம் பெற்ற இவர், மொடல் அழகி என்பதுடன், தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.   

வெறுமனே மொடல் துறையில் மட்டுமன்றி, சமூகப் பணியில் இவர் தன்னை ஈடுபடுத்திக்கொ ண்டுள்ளார். புலம்பெயர் மற்றும் பெண்கள் மறுவாழ்வு தன்னார்வ மையத்தின் அங்கத்தவராக இணைந்துகொண்டு அவர், சமூக பணியாற்றி வருகிறார்.   

உலக அழகி பட்டத்தின் பணிப்பாளரான ஜுலியா மொரலியால் நடத்தப்பட்டு வரும் Beauty With a Purpose அறக்கட்டளை நிறுவனத்தின் தூதுவராக, வனெசா போன்ஸி டீ நியமிக்கப்பட்டுள்ளார்.   

மேற்படி அறக்கட்டளையானது, 100 நாடுகளுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் தூதுரவராக, வனெசா நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் அடுத்தக்கட்டத்துக்கான தனது சமூக பணியையும் ஆரம்பித்துள்ளார்.   

“என்னால் இ​ைத நம்ப முடியவில்லை. அனைத்துப் பெண்களுக்கும் இந்த வெற்றி தேவை என்று நினைக்கிறேன். அவர்கள் அனைவரையும் பிரநிதித்துவம் செய்வதில் நான் பெருமையடைகிறேன். கிடைத்த நேரத்தில் என்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அவற்றை நான் செய்வேன். அைனருக்கும் நன்றிகள்” என்பதே, அவரது வெற்றி வாசகங்களாக அமைந்திருந்தன. வனெசா போன்ஸி டீ லியோனின் சமூகப் பணியைப் பின்தொடர்வோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X