2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

WWE ரெஸ்லிங் வீரர் மச்சோ மேன் விபத்தில் பலி

Super User   / 2011 மே 21 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவின் பிரபல WWE மல்யுத்த (ரெஸ்லிங்) வீர்ர்களில் ஒருவரான மச்சோ மேன், வாகன விபத்தொன்றில் வெள்ளியன்று உயிரிழந்துள்ளார்.

58 வயதான இவரின் உண்மையான பெயர்  ரண் சாவேஜ் ஆகும். அமெரிக்காவின் புளோரிடா மாநில்தில் செமினோல் இடத்தில்  ரண்டி பயணம் செய்த வாகனம் மரமொன்றில் மோதியதால் உயிழரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு தொழிற்சார் மல்யுத்தப் போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்த மச்சோ மேன், (ரண்டி சாவேஜ்) குளிர்கண்ணாடி, கௌபோய் தொப்பி மற்றும் பளபளப்பான ஆடைகள் அணிந்து அரங்கிற்குள் பிரவேசிப்பவர் என நன்கு அறியப்பட்டவர்.

வெள்ளிக்கிழமை காலை அவர் ஓட்டிச்சென்ற வாகனம்  கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது என சாவேஜின் சகோதரர் லனி பொபோ தெரிவித்துள்ளார்.

சாவேஜின் மனைவி லைன் பாய்னேவும் அவ்வாகனத்தில் இருந்துள்ளார். எனினும் சிறு காயங்களுடன் அவர் தப்பியுள்ளார். கடந்த வருடம் மே மாதமே இவர்கள் திருமணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Thursday, 26 May 2011 02:52 AM

    எத்தனயோ பேரை தூக்கி அடித்தவரை தன் கார் தூக்கி அடித்துவிட்டது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X