2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

30 வயதில் இங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரணம்

A.P.Mathan   / 2014 மே 06 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் முன்னாள், முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை எலினா பல்டாச்சா நேற்றைய தினம் தனது முப்பதாவது வயதில் காலமானார். சிறு வயது முதல் ஈரல் உபாதைக்குட்பட்டு இருந்தவர், அந்த நோயின் பாதிப்பு அதிகரித்தமையினால் மரணமடைந்துளார். சோவியத் யூனியன், யுக்கிரையினில் பிறந்த இவர் அவரது பெற்றோரோடு 1989ஆம் ஆண்டு இங்கிலாந்தில் குடியேறினார். இவரின் பெற்றோரும் முன்னணி விளயாட்டு வீர வீராங்கனைகளாக திகழ்ந்துள்ளனர்.

2002ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் சர்வதேச டென்னிஸ் அரங்கில் கால் பதித்த இவர் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார். இருப்பினும் முழங்கால் சத்திர சிகிச்சை காரணமாக 2012ஆம் ஆண்டு வரையே இவர் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். இங்கிலாந்து சார்பாக விளையாடிய டெனிஸ் வீராங்கனைகளில் கூடுதல் காலம் முதலிடத்தில் இருந்தவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. கிரான்ஸ்லாம் பட்டங்கள் எதனையும் வெற்றி பெற முடியாமல் போனாலும், கிரான்ஸ்லாம் போட்டிகளில் மூன்று தடவை இரண்டாமிடத்தையும், ஒரு தடவை மூன்றாமிடத்தையும் பெற்றவர் எனபது குறிப்பிடத்தக்கது. உலக தரப்படுத்தல்களில் இவர் 49ஆவது இடத்தையே பிடிக்கக் கூடியதாக இருந்தது.

எலினா பல்டாச்சா இற்கு ஈரல் உபாதை சிறு வயது முதல் இருந்து வந்த போதும் அவரின் உடற்பயிற்சிகளும், கட்டுக்கோப்பான உடலுமே அவர் இவ்வளவு காலமும் உயிர் வாழக் காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசெம்பர் மாதமே இவர் திருமணம் செய்து இருந்தார். திருமணத்தின் போது நான் அவரைச் சந்தித்து இருந்தேன், நல்ல முறையில் இருந்தார். தேன் நிலவுக்கு கூட சென்று வந்தார். அப்போதே அவரின் உபாதை முத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் சிறு வயது முதலே இந்த வியாதிக்கு அவர் பழக்கப்பட்டு இருந்தமையினால் எலினா இதை வெளிக்காட்டவில்லை அல்லது பெரிது படுத்தவில்லை என அவரின் நீண்ட நாள் பயிற்றுவிப்பாளர் நினோ செர்வினோ தெரிவித்துள்ளார்.

எலினா பல்டாச்சா நல்ல டென்னிஸ் வீராங்கனை எனபதைத் தாண்டி நல்ல ஒரு பெண்மணி எனவும், நல்ல பண்புகளையும், மனித நேயம் கொண்டவர் எனவும் இங்கிலாந்து ஊடங்கள் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X