2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

2500 பெண்களுடன் உறவுகொண்டராம் நடிகர் ரிச்சர்ட் பர்ட்டன்

Super User   / 2011 மே 15 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹொலிவூட் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவராக விளங்கிய ரிச்சர்ட் பர்ட்டன், 30 வருடங்களாக வாராந்தம் 3 பெண்கள் வீதம் உடலுறவு கொண்டதாக புதிதாக வெளியிடப்பட்டுள்ள நூலொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகை எலிஸபெத் டெய்லரை இரு தடவை திருமணம் செய்த நடிகர் ரிச்சர்ட் பர்ட்டன் 1984 ஆம் ஆண்டு தனது 58 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்  தனது வாழ்க்கையில் சுமார் 2500 பெண்களுடன் உறங்கியதாக அந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 தடவை திருமணம் செய்த ரிச்சர்ட் பட்டன் 1947 முதல் 1975 ஆம் ஆண்டுவரை புகழின் உச்சியில் இருந்த காலத்தில் குறைந்தபட்சம் ஒன்றுவிட்டு ஒருநாள் புதிய பெண்ணொருவருடன் காமத்தில் ஈடுபட்டவராக அறியப்பட்டவர்.

ரூத் வாட்டர்பரி எனும் இந்நூலாசிரியர், 1950களில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரிச்சர்ட் பர்ட்டன் பெண்களோடு பொழுதுபோக்குவதை நேரில்கண்டவர்.

1944 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் தனது கன்னித் தன்மையை இழந்தார்  ரிச்சர்ட் பர்ட்டன். அதன்பின் திருமணங்கள், காதல், வெறும் காம அடிப்படையிலான உறவு என ஏராளமான பெண்களை அனுபவித்தார். தனது நண்பர் ஒருவரின் மனைவியுடனும்  அவர் நீண்டகாலம் தொடர்பு கொண்டிருந்தாராம்.

நடிகை சிபில் வில்லியம்ஸ் என்பவரை திருமணம் செய்ததற்கு அடுத்த நாளே 17 வயதான நடிகை கிளேரி புளூம் என்பவருடன் ரிச்சர்ட் பர்ட்டன் காதல் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • Nishanthan Monday, 16 May 2011 04:03 AM

    இது என்ன சாதனையா? கருமம்

    Reply : 0       0

    T.Ramesh Monday, 16 May 2011 05:09 AM

    இதைவிட அதிக எண்ணிக்கையானோருடன் உறவு கொண்ட விபசாரிகள் எத்தனையோ பேர் இருக்கக்கூடும்.

    Reply : 0       0

    Risvi Monday, 16 May 2011 06:30 PM

    2500 பெண்களுடனா? அவருக்கு எத்தனை ஆயிரம் நோய்கள் வந்ததோ

    Reply : 0       0

    Anban Monday, 16 May 2011 07:26 PM

    நல்லவேளை செத்தாச்சு பொறம்போக்கு

    Reply : 0       0

    Kethis Monday, 16 May 2011 08:54 PM

    இவர் அதிக பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர் என்பதை அறிந்தே அப்பட்டியலில் தாமும் இடம்பெறுவதற்கு முண்டியடித்தவர்களாகவும் இந்த 2500 பெண்களில் பலர் இருப்பர். சில பெண்களின் குணம் அப்படி.

    Reply : 0       0

    Genuine Boy Tuesday, 17 May 2011 02:19 AM

    இது பொய்

    Reply : 0       0

    thahir Tuesday, 17 May 2011 02:36 AM

    கருமம் இதல்லாம் ஒரு சாதனை

    Reply : 0       0

    musfeer Tuesday, 17 May 2011 07:36 PM

    என்ன கொடும சரவணா இது?

    Reply : 0       0

    xlntgson Tuesday, 17 May 2011 09:26 PM

    promiscuity என்னும் தற்காலிக உறவுகள் & திருமணத்துக்கு அப்பாற்பட்ட இவ்வாறான உறவுகளுக்கு ஆண்கள் அலைவதில் ஆச்சரியமில்லை, எயிட்ஸ் ஒருபுறம் இருக்க. ஆனால் பெண்கள் இவ்வாறு திரிவதுதான் ஆச்சரியம்! சில காலத்துக்கு முன் ஓர் இங்கிலாந்து பெண் 5000பேருடன் உறவு கொண்டும் ஆரோக்யமாக இருப்பதாக அறிவித்ததையும் அதற்கு கருத்துகளை சேர்த்ததையும் நான் நினைவுகூருகின்றேன். archive இல் போய்ப் பார்க்கலாம்! "இங்கிலாந்தின் பெண்களும் இந்தியாவின் ஆண்களும் ஆசைகள் அடங்காத ஆட்கள்", என்று தொடங்கும்!

    Reply : 0       0

    mures Monday, 06 June 2011 01:28 AM

    சாதனைகள் பலவிதம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X