2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

25 ஆண்டுகளில் கிரேட்டஸ்ட் இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது.

பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

வலைத்தளத்தில் நேரடியாக உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விபரம் அந்த நிறுவன இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.
 
மூன்று தினங்களுக்கு முன் 5ஆம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் வருகிறார் 6.99 சதவீத வாக்குகளுடன். அப்துல் கலாமுக்கு மூன்றாவது இடமும், ஏ.ஆர்ரஹ்மானுக்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளன.

You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Saturday, 14 September 2013 12:30 PM

    கற்பனையில் நிஜம் என்று மயங்கும் காளான்களை துதிபாடும் நுட்ப அறிவற்ற பதர்களின் முன் அறிவும் ஞானமும் செயல் வீரமும் மிக்கவர்கள் பின் தள்ளப்படுவது இக்காலத்தின் கோலமே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X