2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஆரோக்கியமான வாழ்வுக்கு தண்ணீர் பருகவும் : மிஷேல்

Super User   / 2014 ஜூலை 24 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஆரோக்கியமான வாழ்வுக்கு அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல் தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வுhசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'டிரிங்க் அப்' விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் கலச்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் ,

'அதிக அளவில் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. எனவே தவறாமல் தண்ணீர் குடியுங்கள். 'டிரிங்க் அப்' என்ற விழிப்புணர்வு இயக்கம் தொடங்கி ஓராண்டுக்குள்ளாகவே பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை 3 சதவீதம் அதிகரித்துளள்மை மகிழ்ச்சியளிக்கிறது. இதுதவிர ஒட்டுமொத்த தண்ணீர் பயன்பாடும் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

குழந்தைகளைக் கவரும் வகையில் நொறுக்குத் தீனிகளை விளம்பரப்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் அதிக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதுபோல உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தால் குழந்தைகள் அதை விரும்புவார்கள். பொதுமக்களும் ஆரோக்கியமான பொருட்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவார்கள்.

அந்த வகையில் முதல்கட்டமாக தண்ணீரை சந்தைப்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டால், பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள், பால் பொருட்கள் உட்பட ஆரோக்கியமான மற்ற பொருட்களையும் அதே வழியில் எளிதாக சந்தைப்படுத்த முடியும். குழந்தைகளும் இத்தகைய பொருட்களை விரும்பி சாப்பிடுவார்கள்.

அமெரிக்காவில் தற்போது 90 சதவீத பாடசாலைகளில் ஆரோக்கியமான உணவு வகைகள் வழங்கப்படுகின்றன' என தெரிவித்தார்
 குழந்தைகளும் பெரியவர்களும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக டிரிங்க் அப் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மிஷேல் மேற்கொண்டு வருகிறார்.

இதுதவிர, குழந்தைகளின் உடல் பருமனை கட்டுப்படுத்துவது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைபிடிப்பது, உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வது தொடர்பாக அமெரிக்க குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி
வருகிறார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X