2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வீர சிவாஜியின் புத்தகம் வெளியீடு

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மராட்டிய மன்னர் சிவாஜி குறித்த சித்திரக் கதை புத்தகம்  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வீர சிவாஜியின் புத்தகம் வெளியிடப்பட்டது

இந்திய ஓவியர் பிரிஜேஸ் மோக்ரே வரைந்த சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடைய 100 ஓவியங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் பாபாசாஹிப் புரேந்தர் இப்புத்தக்கத்தை வெளியிட்டார்.

88 பக்கங்கள் அடங்கிய இப்புத்தகத்தை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று பாபாசாஹிப் புரேந்தர் தெரிவித்தார்.

''உள்நாட்டின் சிறந்த ஆட்சியாளர்களைப் பற்றிய புத்தகங்களைப் படிக்க இந்திய மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நெப்போலியன் குறித்த புத்தகம் இரண்டரை லட்சம் பிரதிகள் விற் கின்றன. ஆனால் வீர சிவாஜியின் புத்தகம் அதிக அளவில் விற்பது இல்லை'' என்றும் அவர் கூறினார்.

இப்புத்தகமானது, பிரிட்டன் நாடாளுமன்ற நூலகத்தில் வைக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X