2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஒலிம்பிக் சாதனை வீரரின் கை, இயக்கத்தை இழந்தது

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் சாதனை நீச்சல் வீரர் இயன் தோப் தனது இடது கையின் இயக்கத்தை இழந்து, இனி நீச்சல் போட்டிகளில் பங்கு பற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். விபத்து ஒன்றில் கை மூட்டில் ஏற்ப்பட்ட உபாதைக்கு, சத்திர சிகிச்சை செய்து கொண்ட பின்னர், அந்த இடத்தில் ஏற்பு ஏற்ப்பட்டதன் விளைவாக அவருடைய இடது கை இயக்கத்தை இழந்துள்ளது. அவரின் உயிருக்கு ஆபத்து என செய்திகள் வெளிவந்த நிலையில் அவரின் முகாமையாளர் இந்த செய்தியினை உறுதிப்படுத்தியுளார். இருப்பினும் இயன் தோப்புக்கு இந்த செய்தியை யாரும் இன்னமும் சொல்லவில்லை எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா வீரரான இயன் தோப், 1998ஆம் ஆண்டிலுருந்து 2004ஆம் ஆண்டுக்குள் 9 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவர் என்பதுடன் 2001ஆம் ஆண்டு சம்பியன்சிப் போட்டிகளில் 6 தங்கப்பதக்கங்களை வென்று, ஒரு வருடப் போட்டியில் கூடுதல் பதக்கங்களை வெற்றி பெற்றவர் என்ற சாதனையை தனதாக்கினார். 11 சர்வதேச பட்டங்களை இவர் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2006ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகிய 31 வயதான தோப், மீண்டும் 2011ஆம் ஆண்டு போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்தார். இருப்பினும் ஆரம்ப காலங்கள் போன்று மீண்டும் போட்டிகளில் சோபிக்க முடியவில்லை. இந்த வருடம் கொமன் வெல்த் போட்டிகள், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபற்ற தயாராக இருந்த நிலையில் இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X