2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

மீண்டும் முதலிடத்தில் பில்கேட்ஸ்

A.P.Mathan   / 2014 மார்ச் 04 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்ப்ஸ் சஞ்சிகை வருடாந்தம் நடத்தும் ஆய்வின் அடிப்படையில் உலகிலுள்ள செல்வந்தர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

76 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்துமதிப்பினைக் கொண்ட பில்கேட்ஸுக்கே முதலிடம் கிடைத்துள்ளது. மெக்ஸிக்கோவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பிரமுகர் மோகுல் கார்லோஸ் சிலிம் ஹெலு, 72 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்பினைக் கொண்டு, இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். மூன்றாம் இடத்தில் ஸ்பைன் நாட்டின் ஆடைத்தொழில் பிரமுகர் அமென்சியோ ஓர்டேகா, 64 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்பினைக் கொண்டு, மூன்றாம் இடத்தில் இருக்கின்றார்.

போர்ப்ஸ் சஞ்சிகை கடந்த இருபது வருடங்கள் நடத்திய உலக செல்வந்தர்களுக்கான கருத்துக் கணிப்பில், 15 தடவைகள் பில்கேட்ஸ் முதலிடத்தினைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர்ப்ஸ் சஞ்சிகையின் இந்த ஆய்வறிக்கை நேற்று (03) வெளியிடப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X