2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார்

Super User   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கவலைக்கிடமான நிலையில் இன்று (13.2.2014) அதிகாலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இயக்குநர்கள் பாலா, அமீர்இ ராம் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று சிகிச்சை குறித்து விசாரித்தனர்.   உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் 11 மணியளவில் அவர் காலமானார்.

பாலுமகேந்திரா கடைசியா இயக்கிய படம், ''தலைமுறைகள்''.  இந்தப்படத்தில்,  அவரே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர், நடிகர் என்று பண்முகம் கொண்டவர் பாலுமகேந்திரா.  1946 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இலங்கையில்,மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர்,மகேந்திரா. இலங்கையில் இவரது பக்கத்து வீட்டுக்காரர் கவிஞர் காசி ஆனந்தன்.

லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971இல் தங்கப்பதக்கம் பெற்றார்.

 'நெல்லு' மலையாள படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அப்படத்துக்கு 1972 இல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு'இ' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள்.

ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராகவும் மாறினார்.  1977இல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம்இ வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது.

1983 ஆம் ஆண்டு கலவரத்தின் போது இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றிருந்த அவர், இவ்வருடத்திற்கு இலங்கைக்கு திரும்பி படமொன்றை இயக்கவிருப்பதாக தனக்கு நெருக்கமான இலங்கை நண்பர்களிடம் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • A.K.Thas Thursday, 13 February 2014 10:54 AM

    நம் நாட்டு கலைப் பொக்கிஷம் ஆழ்ந்த உறக்கத்தில் அழியாத கோலமாய்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .