2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

சச்சினுக்கு 'பாரத ரத்னா' விருது

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்காருக்கு இந்திய உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. 
 
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கி வைத்தார். இந்த விருதைப் பெறும் முதல் விளையாட்டு வீரர் சச்சின் என்பதுடன் இள வயதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சச்சினுக்கு தற்போது வயது நாற்பது. இந்த விருதைப் பெற்று அங்கு உரையாற்றிய சச்சின், இந்த விருது தனக்கு மிகப்பெரிய கௌரவத்தையும் அகமகிழ்வையும்  தரும் அதேவேளை தான் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் நாட்டிற்காக இன்னும் துடுபெடுத்தாடவுள்ளமையை நினைவுபடுத்துகிறது என தெரிவித்தார்.  
 
54ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது இதுவரை 43 பேருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X