2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

உமர் அக்மல் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல், பாகிஸ்தான் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 மணி நேரத்தின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 
 
இருப்பினும் வீதி ஒழுங்கு முறைகளை மீறியமை, பொலிஸாரை தங்கள் கடமையை செய்ய விடாமல் இடையூறு செய்தமை, பொலிஸாரை அச்சமூட்டும் வகையில் நடந்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளுக்காக உமர் அக்மல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
பாகிஸ்தானில் உள்ள சந்தை தொகுதி ஒன்றிக்கு அண்மையில் உள்ள வீதி சமிக்ஞையில் உமர் அக்மல் தனது வாகனத்தை நிறுத்தாமல் சென்ற வேளையில் அவரை வீதி போக்குவரத்து பொலிஸார் தடுக்க முற்பட்ட போது முடியாமல் போக, மீண்டும் சிறிது நேரத்தில் அவர் பிடிக்கப்பட்டார். அந்த நேரத்தில் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸாரின் சீருடையை பிடித்தும் உள்ளார். இதன் பின்னரே உமர் அக்மல் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். "பொலிஸார் தனது கன்னத்தில் அறைந்ததாகவும், கன்னத்தில் காயம் இருப்பதாகவும், இதை பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற வேளையில் தன்னை கைது செய்து வழக்கு பதிவு செய்து விட்டார்கள். தான் எந்த பிழையும் செய்யவில்லை" என உமர் அக்மல் தெரிவித்த போதும் உதவிக் காவல்துறை மேலாளர் விசாரணைகளில் அடிப்படையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை என கூறினார். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் உமர் அக்மலுக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்க அல்லது மிகப்பெரிய தண்டம் அறவிடப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. 
 
பொலிஸார், உமர் அக்மலை மன்னிப்பு கேட்கும் படி கூறியதாகவும், அதற்கு அவர் மறுக்கவே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கிரிக்இன்போ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X