2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

மண்டேலாவின் காதுக்குள் முயலை செதுக்கியதால் சர்ச்சை

Kogilavani   / 2014 ஜனவரி 23 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


மறைந்த முன்னாள் தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவுக்காக வைக்கப்பட்ட நினைவுச்சிலையின் இடதுகாதினுள் முயலின் உருவம் செதுக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கறுப்பினர்த்தவர்களின் தலைவரான நெல்சன் மண்டேலாவை கௌரவப்படுத்தும் வகையில் அவரது இறுதி ஊர்வலமான டிசெம்பர் 16ஆம் திகதி பிட்டோரியாக நகரில் உள்ள அரசாங்க கட்டட வளாகமொன்றில் 30 அடி உயரமான வெண்கலச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

இந்தச் சிலையின் இடதுகாதினுள் முயலின் உருவம் செதுக்கப்பட்டுள்ளதால் தென்னாபிரிக்கர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அந்த முயலின் உருவம் சிலையிலிருந்து அகற்றப்படவேண்டுமென அரச அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்டேலாவின் நினைவுச்சிலையில் திணைக்களத்தின் கையெழுத்தாகவே முயலின் உருவம் செதுக்கப்பட்டதாகவும் அது இரண்டு சிலைகளாக மாறும் என்று தாம் அறிந்திருக்கவில்லை என்றும்  கலை மற்றும் கலாசாரதுறை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்தச் செயற்பாடானது தங்களது படைப்புத்திறமையை மலினப்படுத்தும் செயற்பாடு எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

'அந்த முயலின் உருவம் நீண்ட நாட்களுக்கு இருக்காது' என கலை மற்றும் கலாசாரதுறை திணைக்கத்தின் பேச்சாளர் மோகோமொஸ்டி மோகோடிரி தெரிவித்துள்ளார்.

'இந்த சிலையானது தென்னாபிரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமையை சேர்க்கின்றது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சிலையில் காணப்படும் முயலின் உருவத்தை சிலைக்கு சேதம் விளைவிக்காமல் எவ்வாறு அகற்றுவது என்பது தொடர்பிலான கலந்துரையாடலில் மேற்படி கலை மற்றும் கலாசார திணைக்களம் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X