2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

நடிகை கனகா காலமானார் ?

Kanagaraj   / 2013 ஜூலை 30 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை கனகா புற்று நோயால் மரணமடைந்துவிட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் அவர் உயிரோடு தன் சென்னை வீட்டில் உள்ளாரென்றும் தான் உயிரோடு உள்ளதை நிரூபிக்க இன்று அவசரமாக செய்தியாளர் சந்திபொன்றை வைத்து செய்தியாளர்கள் முன் தோன்றினாரென்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரகாட்டக்காரனில் அறிமுகமாகி தென் இந்திய சினிமாவின் முதல் நிலை நாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை கனகா.
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவருக்கு தற்போது 40 வயதாகிறது.

கனகா பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி, உடல் நலம் குன்றியிருந்தார். கடந்த சில மாதங்களாக அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. திடீரென அவரை கேரளாவில் ஆதரவற்றோருக்காக நடிகர் ஜெயராம் நடத்தும் ஆலப்புழா மருத்துவமனையில் சினிமா பிரமுகர் ஒருவர் பார்த்துள்ளார்.

அதன் பிறகே கனகா பற்றி தெரிய வந்தது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நடிகை கனகா இன்று பிற்பகல் மரணம் அடைந்ததாக செய்தி ஏஜென்சிகள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால் கனகா மரணமடையவில்லை என்றும், அவர் கேரள மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவரது அப்பாவும் சித்தப்பாவும் ஊடகங்களுக்கு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென கனகா செய்தியாளர்களைச் சந்திப்பதாக தகவல் வெளியானதும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்கள் குவிந்தனர்.

சில நிமிடங்களில் செய்தியாளர்கள் முன் தோன்றிய கனகா, தான் உயிரோடு இருப்பதாகவும், கேரளாவில் சிகிச்சைப் பெற்றதாகக் கூறப்பட்டதில் உண்மை இல்லை என்றும் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • shan Wednesday, 31 July 2013 01:09 AM

    kanaha kalamaha villai...... idhu oru vadhandhi... (avar yester day 30 evening, "than uyirudanum, nalamudanum,thanakku endha noyum illai" enayum petti aliththirundhar..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X