2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

உலகில் அதிக வயதுடைய ஜப்பானியர் மரணம்

Kogilavani   / 2013 ஜூன் 12 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் அதிக வயதுடைய நபர் என்ற கின்னஸ் சாதனைபுரிந்த ஜப்பானியர் நுரையீரல் பாதிப்புக் காரணமாக தனது 116 ஆவது வயதில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

ஜப்பானை சேர்ந்த ஜிரோமோன் கிமுரா என்பவரே உலகில் அதிக வயதுடையவர் என்ற சானையை  கடந்த 2012 ஆம் நிலைநாட்டியிருந்தார்.

1897ஆம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப் பருவத்தில் தபால் துறை ஊழியராக பணியாற்றினார்.

தனது 115வது ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது நீண்ட ஆயுளுக்கு அதிக நேரம் சூரிய வெளிச்சத்தின் கீழ் நின்றிருப்பதுதான் காரணம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

கிமுராவுக்கு 7 பிள்ளைகள், 14 பேரக் குழந்தைகள், 25 கொள்ளுப்பேரன் பேத்திகள், 15 எள்ளுப்பேரன் பேத்திகள் உள்ளனர்.

இறுதிக் காலத்தை விவசாயம் செய்வதில் கழித்த கிமுரா நுரையீரல் பாதிப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கிமுரா உயிரிழந்த நிலையில், அவரது இடத்தை பிடிக்க மற்றொரு ஜப்பானியரான 115 வயதாக மிசாவோ உகாவாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நூறு வயதை கடந்த சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. (தட்ஸ் தமிழ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X