2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீசாந்தின் மடிக் கணினியில் மொடல் அழகிகளின் நிர்வாணப் படங்கள்

Kogilavani   / 2013 மே 20 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஸ்பாட் பிக்ஸிங்' இல் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் மடிக் கணினியில் மொடல் அழகிகள் பலரின் நிர்வாண மற்றும் அரை நிர்வாண புகைப்படங்கள் இருந்ததை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் மடிக் கணினியை மும்பையில் உள்ள சோபிடெல் ஹோட்டலில் வைத்து பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

அதில் அதிகம் பிரபலமில்லாத மொடல் அழகிகளின் நிர்வாண படங்கள் இருந்ததாகவும், அவர்கள் ஸ்ரீசாந்துடன் 5 முதல் 6 பார்ட்டிகளில் கலந்துகொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீசாந்த் பல்வேறு பெண்களுடன் படுக்கையில் இருக்கும் புகைப்படங்களும் இருந்ததாக கூறப்படுகின்றது. 

ஸ்ரீசாந்தின் அறையில் இருந்து 2011, 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுக்கான நாட்குறிப்போடுகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

அதில் ஸ்ரீசாந்த் தனது நடவடிக்கைகளை மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்.

மொடலிங் உட்;பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு தனக்கு கிடைத்த பண விவரங்களையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதில் அவர் கேரளாவைச் சேர்ந்த 2 தரகர்களின் பெயர்கள் மற்றும் டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்பூரைச் சேர்ந்த தரகர்களின் பெயர்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசி எண்களை எழுதி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீசாந்தின் அறையில் இருந்து ஒரு மடிக்கணினி, ஐபேட், 2 கையடக்கத் தொலைபேசிகள், சார்ஜர்கள் மற்றும் ரூ.75,000 ரொக்கம் பணம்பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (தடஸ்தமிழ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X