2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

அண்ணிக்கு ஆண் குழந்தையே பிறக்கும்: இளவரசர் ஹரி

Menaka Mookandi   / 2013 மே 06 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து இளவரசியும், தனது அண்ணியுமான கேட் மிடில்டன்னுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலியான கேட் மிடில்டன்னை மணந்தார். கேட் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று ஆளாளுக்கு யூகித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இளவரசர் ஹரி. பார்ப்பவர்களிடம் எல்லாம் வில்லியம் மற்றும் கேட்டுக்கு ஆண் குழந்தை பிறக்கப்போகிறது என்று கூறி வருகிறாராம். ராஜ குடும்பம் மொத்தமும் ஆண் குழந்தை பிறக்கப் போகும் சந்தோஷத்தில் உள்ளது.

கேட்டுக்கு ஆண் குழந்தை தான் விருப்பம். ராஜ குடும்பத்தாருக்கு நெருங்கியவர்களுக்கு கேட்டுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கப் போகிறது என்பது தெரியும். அதனால் அவர்கள் அதற்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் வாங்க ஆரம்பித்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து வில்லியம் மற்றும் கேட் இதுவரை எதுவுமே தெரிவிக்கவில்லை. அவர்கள் இருவரும் குழந்தைக்கு பெயர் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அதை அவர்கள் ஹரி உட்பட யாரிடமும் இப்போதைக்கு தெரிவிக்கப் போவதில்லையாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X