2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

முதல் விண்வெளி வீரராக பெருமையடைய விரும்பும் ஈரான் ஜனாதிபதி

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 05 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை தான் அடைய விரும்புவதாகவும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் ஈரானின் முயற்சிக்கு முதல் வீரராக தான் விண்ணுக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும் ஈரான் ஜனாதிபதி மஹமூத் அஹமதி நிஜாட் தெரிவித்துள்ளார்.

இதற்காக தனது உயிரைக் கூட தியாகம் செய்யத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'ஈரான் விஞ்ஞானிகளுக்கு நான் சொல்லிக்கொள்வது, நான் விண்வெளி வீரராக, முதல் ஈரான் விண்வெளி வீரராக நான் விண்ணுக்குச் செல்லத் தயார். உயிரினங்களை விண்வெளிக்கு அனுப்பும் ஈரானின் திட்டங்களுக்கு நான் தியாகக் கல்லாக விளங்கவும் தயாராக இருக்கிறேன்.

உயிரினங்களை விண்வெளிக்கு அனுப்பும் ஈரானின் திட்டங்கள் படிப்படியாக பயன்தர ஆரம்பித்துள்ளது. இது ஆயிரக்கணக்கான ஈரான் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்' என்றார்.

கடந்த திங்கட்கிழமைதான் ஒரு குரங்கை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்தது ஈரான். இதனால் அடுத்த ஐந்து அல்லது 6 ஆண்டுகளில் மனிதனை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி வைப்போம் என்றும் ஈரான் ஜனாதிபதி வெற்றிப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

சுமார் 72 மைல் தூரத்திற்கு விண்வெளியில் பயணம் செய்த பிஷாம் என்ற இந்த குரங்கு பின்னர் கவனமாக பூமிக்கு திரும்பி வந்து சாதனை படைத்தது. ஆனால் ஈரான் இதில் மோசடி செய்துள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

விண்வெளிக்கு அனுப்பிய குரங்காக காட்டப்பட்ட புகைப்படத்திற்கும், திரும்பி வந்த குரங்கு என்று வெளியான புகைப்படத்திற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் காணப்படுவதாகவே சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X