2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

அரசியலில் களமிறங்கினார் ஜெக்கி ஷான்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 04 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன அரசுக்கு ஆலோசனை கூறும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல நடிகர் ஜெக்கி ஷான். இதன் மூலம் சீன அரசியலில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளார் ஜெக்கி ஷான்.
 
சீன கம்யூனிஸ்டு கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஸி ஜின்பிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் புதிய ஜனாதிபதியாக இவர் பதவி ஏற்கிறார்.

இந்த ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாக, மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல் குழுவை அமைத்து புதிய உறுப்பினர்களை நியமித்து வருகிறார் புதிய ஜனாதிபதியாகப் போகும் ஜின்பிங்.

சீன நாடாளுமன்றத்தின் ஒரு சபையான இதில் 2,237 இடங்கள் உள்ளன. இக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக பிரபல நடிகர் ஜெக்கி ஷான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய பதவியை சந்தோஷத்துடன் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
 
அண்மையில் அமெரிக்க பத்திரிகைகளில் சீன தலைவர்கள் ஊழல்வாதிகள் என கட்டுரை வெளியாகி இருந்தது. அதை எதிர்த்து ஜெக்கி ஷான் கடுமையாக விமர்சித்திருந்தார்.

உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான் என கருத்து தெரிவித்து இருந்தார். சீன தலைவர்களை வானளாவ புகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X