2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

நெல்சன் மண்டேலா வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவின் தலைநகரான பிரிடோறியாவில் உள்ள  வைத்தியசாலை ஒன்றிலேயே இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சில வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையிலேயே  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

94 வயதான நெல்சன் மண்டேலா ஆரோக்கியமாகக் காணப்படுவதாகவும் எந்தவித நோய்க்குரிய ஆபத்தும் இல்லை. ஆனாலும் இவரது வயது காரணமாக அவ்வப்போது இவருக்கு வைத்திய சிகிச்சை தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

நெல்சன் மண்டேலா வெள்ளை சிறுபான்மையினரின் நிறவெறி ஆட்சியின் கீழ், சிறையில் இரண்டு தசாப்தங்களை கழித்திருந்தார்.

தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பு இன ஜனாதிபதியாக தெரிவான நெல்சன் மண்டேலா,  1994ஆம் ஆண்டு முதல்  1999ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார்.  இவருக்கு 1993ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X