2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ஆஷா போஸ்லேயின் மகள் தற்கொலை

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாடகியான ஆஷா போஸ்லேயின் மகள் வர்ஷா (வயது 56) நேற்று திங்கட்கிழமை காலை தனது வீட்டில் வைத்து தலையில் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வர்ஷா தனது வரவேற்பறையிலிருந்த சோபாவில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை போஸ்லேயின் சாரதி மு.ப. 10.30 மணியளவில் கண்டதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தற்கொலை குறிப்பேதும் காணப்படவில்லையென தெரிவித்துள்ள பொலிஸார், தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்ஜிய தயாரிப்பான கைத்துப்பாக்கி யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டதென கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சில ஹிந்தி மற்றும் மராட்டியப் படங்களில் பாடியுள்ள வர்ஷா, 1998, 2008ஆம் ஆண்டுகளிலும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆஷா போஸ்லேயின் 3 பிள்ளைகளில் 2ஆவதான இவர் சில சஞ்சிகைகளிலும் வலையமைப்புகளிலும் எழுதியுள்ளார். விளையாட்டு பத்தி எழுதும் பத்திரிகையாளரான இவர் திருமணம் செய்துள்ள போதிலும் கடந்த 1998இல் மணமுறிவை ஏற்படுத்திக் கொண்டார். (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .