2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ரஷ்ய ஜனாதிபதியை திருமணம் செய்ய விரும்பும் அந்நாட்டு பெண்கள்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 07 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினை திருமணம் செய்வதற்கு அந்நாட்டு பெண்கள் விரும்புவதாக லெவாடா என்ற நிறுவனத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ரஷ்யா முழுவதிலுமுள்ள சுமார் 2 ஆயிரம் பெண்களிடம் கருத்து கேட்கப்பட்ட போது, அதில் ஐந்து பெண்களில் ஒருவர் புட்டினை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளனர். அவரது ஆளுமையும் நிர்வாகத் திறனுமே தங்களை கவர்ந்திழுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யப் பெண்கள் இவ்வாறு தெரிவிப்பது புதிதல்ல. 2004ஆம் ஆண்டு புட்டினைப் பற்றிய பொப் அல்பம் ஒன்றை வெளியிட்ட பெண்ணொருவர், புட்டினைப் போன்ற கணவர் வேண்டும் என்று கூறியிருந்தார்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு எதிராக அந்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன நிலையில் இவ்வாறானதொரு கருத்துக் கணிப்பில் புட்டினுக்கு ஆதரவாக பெண்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .