2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

போதைப் பொருள் பாவனையில் சிக்கினார் அப்துர் ரெஹ்மான்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரெஹ்மான் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வைத்தே அவர் சிக்கியுள்ளார்.

இங்கிலாந்தில் சமர்செட் அணிக்காகப் பிராந்தியப் போட்டிகளில் பங்குபற்றி வந்த அப்துர் ரெஹ்மான், அங்கு இடம்பெற்ற போதைப் பொருள் சோதனையிலேயே சிக்கியுள்ளார். எனினும் இதுவரை வந்துள்ள தகவல்களின் அடிப்படையில் அவர் பயன்படுத்திய போதைப் பொருட்கள் திறமை வெளிப்பாட்டை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்கள் அல்லவெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

32 வயதான அப்துர் ரெஹ்மான் சமர்செட் அணிக்காக இப்பருவகாலத்தில் 4 பிராந்தியப் போட்டிகளில் பங்குபற்றி 27 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணியின் முக்கிய டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக மாறியிருந்த அப்துர் ரெஹ்மான், இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 81 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

இதில் குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் 19 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

எதிர்வரும் 9ஆம் திகதி முதல் சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடருக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சியல்கொட் ஸ்ராலியன்ஸ் அணியும் அப்போட்டிகளில் பங்குபெறவிருந்தது.

அவ்வணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவராக அப்துர் ரெஹ்மான் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .