2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ஸிம்பாப்வே பிரதமரின் திருமணத்தை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது

Super User   / 2012 செப்டெம்பர் 14 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த ஸிம்பாப்வே பிரதமர் மோர்கன் ஸ்வான்கிரியின் ஆடம்பர திருமண வைபவத்தை அந்நாடடு நீதிமன்றமொன்று தடுத்துநிறுத்தியுள்ளது. பிரதமர் ஸ்வான்கிராய் ஏற்கெனவே திருமணமானவர் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் அரசியல்வாதியொருவரின் மகளான எலிஸபெத் மெசேக்கா என்பருக்கும் பிரதமர் மோர்கன் ஸ்வாங்கிராய்க்கும் இன்று சனிக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது. ஸிம்பாப்வே ஜனாதிபதி ரொபட் முகாபே மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொள்ளவிருந்தனர்.

எனினும் பிரதமர் ஸ்வாங்கிராய் தன்னை ஏற்கெனவே திருமணம் செய்துள்ளதாகதெரிவித்து இன்று நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்துமாறு உத்தரவிடக்கோரி லொகாடியா டெம்போ எனும் பெண் வழக்குத் தொடுத்திருந்தார்.

அதையடுத்து இத்திருமணத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணத்தை நடத்துவதற்கு அவசர உத்தரவு பெறுவதற்கான கடைசிநேர நடவடிக்கைகளில் ஸ்வாங்கிராயின் வழக்குரைஞர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

தன்னை திருமணம் செய்வதாக ஸ்வாங்கிராய் வாக்குறுதியளித்திருந்தர் என தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவரும் வழக்குத் தொடுத்திருந்தார். எனினும் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஸிம்பாப்வே ஜனாதிபதித் தேர்தலில் ரொபட் முகாபேயை எதிர்த்து போட்டிடுவார் எனக் கருதப்படும் ஸ்வாங்கிராயின் புகழுக்கு பங்களம் விளைவிப்பதற்காக இவ்வாறான வழக்குகள் தொடுக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் ஸ்வாங்கிராய் பிரதமராக தெரிவான சிறிது காலத்தில் அவரின் மனைவி 2009 ஆம் ஆண்டு கார் விபத்தொன்றில் காலமானதையடுத்து பல்வேறு பெண்களுடன் சம்பந்தப்பட்டதன் மூலம் அவரே இவ்வாறான நெருக்கடியில் சிக்கிக்கொண்டார் என வேறு சிலர் விமர்சிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .