2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

பெண்ணாக மாறிய “மெட்ரிக்ஸ்” இயக்குநர்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 07 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹொலிவுட்டில் பிரபல மெட்ரிக்ஸ் படங்களை இயக்கிய லோரன்ஸ் என்ற லோரி கடந்த 2002ஆம் ஆண்டு சத்திரசிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். இத்தனை ஆண்டுகளாக அதைப் பற்றி பேசாதவர் முதல் முறையாக தன்னுடைய உணர்வுகளை வெளியுலகிற்கு தெரிவித்துள்ளார்.

பிரமாண்டமான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஹொலி்வுட் படங்கள் மெட்ரிக்ஸ் சீரிஸ். அந்தப் படங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அதை இயக்கிய லோரி கடந்த 2002ஆம் ஆண்டு சத்திர சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது பெயரை லானா வாசோவ்ஸ்கி என்று வைத்துக் கொண்டார். பெண்ணாக மாறிய அனுபவம் குறித்து இத்தனை ஆண்டுகளாக மௌனம் சாதித்த லானா தற்போது முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் டோம் ஹோங்க்ஸை வைத்து லானா எழுதி, இயக்கியுள்ள கிளவுட் அட்லஸ் விளம்பர நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தான் - தான் ஒரு பெண்ணாக மாறியதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். அவர் பெண்ணாக மாறிய பிறகு அவர் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சியும் (கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்) இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நான் பெண்ணாக மாறியது குறித்து உறவினர்களிடம் எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் பல நாள் தூக்கமின்றி தவித்துள்ளேன். எனது பெற்றோர், சகோதரர், சகோதரிகளிடம் இது குறித்து எப்படி சொல்வது என்ற பயத்திலேயே பல நாட்கள் தூங்கவில்லை.

ஆனால் நான் ஒரு பெண் என்பதை எனது தாயிடம் தெரிவித்தபோது அவர் எனக்கு ஆதரவாகப் பேசினார். எனது குடும்பத்தார் அளித்த ஆதரவைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. எங்கே எனது குடும்பத்தார் என்னை ஒதுக்கி விடுவார்களோ என்று பயந்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டதில் பெருமகிழ்ச்சி என்றார். (தட்ஸ்தமிழ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .