2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு 'திரையிசைச் சக்கரவர்த்தி' பட்டம் வழங்கி கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களினால் 'மெல்லிசை மன்னர்' என்று அழைக்கப்பட்டுவந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா  'திரையிசைச் சக்கரவர்த்தி' என்ற புதிய பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளார்.

சென்னையில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற  விழா ஒன்றிலேயே எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அவர் இந்தப் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவின்போது 'திரையிசைச் சக்கரவர்த்தி' எனக் கூறியே எம்.எஸ்.விஸ்வநாதனை ஜெயலலிதா வாழ்த்தி உரையாற்றினார்.

தமிழகத் திரையுலகில் மெல்லிசை மன்னர்களாக எம்.எஸ்.விஸ்வநாதனும் டி.கே.ராமமூர்த்தியும் திகழ்ந்துவருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும்  சாகாவரம் பெற்ற  பல பாடல்களைப் படைத்துள்ளனர். இவர்களின் பாடல்கள் இன்றும் கூட ஒவ்வொருவர் இதயங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

1963ஆம் ஆண்டு சென்னை, திருவல்லிக்கேணியில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்த இசை மன்னர்களுக்கு 'மெல்லிசை மன்னர்கள்' என்ற பட்டத்தை மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வழங்கி கௌரவித்திருந்தார்.  அன்று முதல் இன்றுவரை இவர்கள் இருவரும் 'மெல்லிசை மன்னர்' என்றும்  'மெல்லிசை மன்னர்கள்' என்றும் அழைக்கப்பட்டுவருகின்றனர். 

ஜெயா தொலைக்காட்சி அலைவரிசையின் சார்பில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு  எந்தப் பட்டம் வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என மக்கள் இடையில்  15 நாட்களாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதன்போது  பலரும் பல பட்டங்களைப் பரிந்துரைத்தபோதிலும், இதில் 'திரையிசைச் சக்கரவர்த்தி' என்ற பட்டத்துக்கு அதிக வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்த நிலையிலேயே எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு 'திரையிசைச் சக்கரவர்த்தி' என்ற பட்டத்தை ஜெயலலிதா மூலம் ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்தினர் வழங்கி கௌரவித்துள்ளனர். (தட்ஸ்தமிழ்)

You May Also Like

  Comments - 0

  • Haniff Sunday, 02 September 2012 08:32 AM

    எப்பவோ கொடுக்க வேண்டியது. திரையுலகம் இவரை ஏன் இவ்வளவு காலமும் மறந்திரிந்தது என்பதை நினைக்க ரொம்ப கவலையா இருக்கு. என்டாலும் ஒரு திருப்தி, காலம் கடந்தாலும் கொடுதிட்டாங்கல்ல... ஜெயா அம்மா ! எனது மனமார்ந்த பல கோடி நன்றிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .