2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

மிஷலுடனான முதல் முத்தம் சொக்லேட் போன்றிருந்தது: அமெரிக்க அதிபர் ஒபாமா

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மனைவி மிஷலுக்கு தான் கொடுத்த முதல் முத்தம் சொக்லேட் போன்று சுவையாக இருந்ததாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த 1989ஆம் ஆண்டு மிஷலை முதன் முதலாக சந்தித்தார். அப்போது டேட் செய்யலாமா என்று ஒபாமா கேட்டதற்கு மிஷல் மறுத்துவிட்டார். ஆனால் சில மாதங்கள் கழித்து இருவரும் டேட்டிங் போக ஆரம்பித்தனர். பின்னர் 1991ஆம் ஆண்டு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து 1992ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் மிஷலுக்கு தான் கொடுத்த முதல் முத்தம் சொக்லேட் போன்று சுவைத்ததாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஓ என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

நான் மிஷலுக்கு முத்தம் கொடுத்தேன். அது சொக்லேட் போன்று சுவையாக இருந்தது என்றார்.

அவர்கள் ஹைட் பார்க் ஷாப்பிங் சென்டரில் வைத்துதான் முதன்முதலாக முத்தமிட்டுள்ளனர். அதன் ஞாபகார்த்தமாக அந்த ஷாப்பிங் சென்டரின் உரிமையாளர் ரூ.2.62 லட்சம் மதிப்புள்ள கிரானைட் கல்லை கடந்த வாரம் அங்கு வைத்துள்ளார்.

முத்தம் கொடுக்கும் முன்பு அவர் மிஷலுக்கு பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஐஸ்கிரீம் கடையிலும் அவர்கள் வந்து சென்றதை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னம் வைக்கப்பட்டுள்ளது. (தட்ஸ் தமிழ்)

You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Sunday, 19 August 2012 03:03 PM

    ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்.
    ஆதாம் ஏவால் ஜோடிக்குப் பின்னே அடுத்த ஜோடி இதுதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X