2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

மார்க் பௌச்சருக்குப் பெரும்பாலாக பார்வை மீளக் கிடைக்கும்: வைத்தியர்

A.P.Mathan   / 2012 ஜூலை 27 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மார்க் பௌச்சருக்கு அவரது இடது கண்ணில் பெரும்பாலானளவுக்குப் பார்வை திரும்பக் கிடைக்கப் பெறும் என அவரது மருத்துவக் குழு கருதுவதாக அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மார்க் பெளச்சரின் கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கான நீண்டகாலப் பாதிப்புப் பற்றித் தெளிவாகக் கூற முடியாவிட்டாலும், அவரது மருத்துவக் குழு அவருக்குப் பெரும்பாலானளவுக்குப் பார்வை திரும்பக் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையில் காணப்படுவதாக அவரது வைத்தியரான பீற்றர் சான்டெல் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணி - இங்கிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அத்தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றிருந்த மார்க் பௌச்சர் பயிற்சிப் போட்டியொன்றில் விக்கெட் காப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இம்ரான் தாஹிர் வீசிய பந்து விக்கெட்டைத் தாக்கி அதன் பின்னர் விக்கெட்டின் "பெய்ல்" அவரது இடதுகண்ணைத் தாக்கியதன் காரணமாக சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டார்.

அதன் பின்னர் அத்தொடரிலிருந்து விலகிக் கொண்டு சத்திரசிகிச்சை மேற்கொண்ட மார்க் பௌச்சர், தனது இறுதித் தொடராக அமையவிருந்த அத்தொடரில் பங்குபெறாமல் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

இங்கிலாந்தில் முதலில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட மார்க் பௌச்சர், அதன் பின்னர் தென்னாபிரிக்காவிற்குத் திரும்பி அங்கும் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த 3 தொடக்கம் 6 மாதங்களுக்கு மார்க் பௌச்சர் தொடர்ச்சியாக அவ்வப்போது சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்படுவார் எனவும், அவரது பார்வைத்திறனை அதிகரிப்பதற்காகவே அவை மேற்கொள்ளப்படும் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X