2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

சர்வதேச ஒலிம்பிக் தொடக்க விழாவில் இளையராஜா, மயாவின் பாடல்கள்

Menaka Mookandi   / 2012 ஜூன் 19 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமான முறையில் நடத்தப்படவுள்ள நிலையில் உலக அளவிலான கலாச்சாரங்களையும், கலைகளையும் ஒருங்கிணைத்து ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 86 பாடல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ள இப்பாடல் தொகுதியில் இசைஞானி இளையராஜா மற்றும் எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் மாயா அருள் பிரகாசம் ஆகியோரின் இரு பாடல்களும் ஒலி, ஒளிபரப்பப்படவுள்ளன என்று இங்கிலாந்திலிருந்து வெளிவரும் நாளிதழ்ல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இளையராஜாவின் இசையமைப்பில் 1981ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாஸன் மற்றும் ஸ்ரீப்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளியான ராம் லக்ஷ்மன் திரைப்படத்திலுள்ள 'நான்தான் ஙொப்பண்டா, நல்லமுத்து பேரண்டா வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வர்றேண்டா...' என்ற பாடலே ஒலிம்பிக் தொடக்க விழாவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்தப் பாடல் அந்தக் காலத்தில் விறுவிறுப்பான பாடலாக பலராலும் ரசிக்கப்பட்டது. இப்போது ஒலிம்பிக் களத்தில், உலகப் புகழ் பெற்ற இசைப் பதிவுகளுக்கு மத்தியில் இளையராஜாவின் இந்தப் பாடல் இடம்பெறப்போகிறது.

இதேவேளை, இளையராஜாவைத் தொடர்ந்து இன்னொரு தமிழரின் பாடலும் ஒலிம்பிக் விழாவில் களைகட்டப்படவுள்ளது.  எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் மாயா அருள் பிரகாசத்தின் பிரமாண்டப் பாடலும் இந்நிகழ்ச்சியில் அரங்கேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X