2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

நடன நட்சத்திரமானார் சனத் ஜயசூரிய (வீடியோ)

Super User   / 2012 மே 31 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, நடன நட்சத்திரமாகியுள்ளார். இந்திய தொலைக்காட்சியொன்றின் 'ஜலக் டிக்லா ஜா' எனும் நடன நிகழ்ச்சியில் சனத் ஜயசூரிய பிரபல நட்சத்திரமாக திகழ்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கான நடுவர்களில் ஒருவராக பொலிவூட் நடிகை மாதுரி தீக்ஷித் விளங்குகிறார்.

தனது நடனக் கலைஞர் அவதாரத்தில் சனத் ஜயசூரிய மிக ஆர்வமாக இருப்பதாகவும் அடிக்கடி ஒத்திகைகளில் ஈடுபடுவதாகவும் இந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தளத்திலுள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.

42 வயதான சனத் ஜயசூரிய, தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாணி நடனத்தில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • meenavan Friday, 01 June 2012 03:37 AM

    ஆடுங்கள்... ஆடுங்கள்... நன்றாக ஆடுங்கள் கிரிகெட் ஆடுகள ஆட்டம் முடிந்து விட்டது நடனமாடுங்கள் பாராளுமன்ற ஆடுகளம் பொருத்தமில்லை,உங்களை மிஞ்சிய நடன ஜாம்பவான்கள் அங்கு ஏராளம். லெக் ஸ்பின்,ஆப் ஸ்பின், கூக்லி, தூஸ்ரா, மீடியம் பேஸ் ,பாஸ்ட்.. போதாதற்கு பௌன்செர் ஹெல்மெட் போடமுடியாது தலையில் பட்டால் ஐயோ.. ஐயோ... நாடு மாஸ்டர் ப்ளாஸ்டரை இழக்க விரும்பாது.....நீங்கள் ஆடுங்கள் நடனமாடுங்கள்....?

    Reply : 0       0

    sanath Monday, 04 June 2012 05:23 AM

    என்ன கொடுமை சார் இது..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X